கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, May 21, 2010

தனிமை

பி யு சின்னப்பா காலத்தில் ஒரு மாடம், மாடத்தின் ஊடே செடி கொடிகள். அதன் வழியே பார்த்தால் நிலா.
சிவாஜி கணேசன் காலத்தில் வெளியுலகம்; கடற்கரை மணல், கடல் அலை, தூரத்தில் தெரியும் கப்பல்.
ரஜினி காலத்தில் குளிர் அரை , படுக்கை, அந்த அறையின் ஓவியங்கள், படுக்கை விளக்கின் பக்கத்தில் ஒரு தனித்த பெண்ணின் பொம்மை.
தற்போது நமது காலத்தில் என் தனிமையை உணர்த்த எனது கைப்பேசி ; .

நான் சென்னை வாசியாக இருந்த வரையில் தினமும் 10 சிறு செய்திகளை எனது கைப்பேசியிலிருந்து நீக்கினால் மட்டுமே அடுத்த செய்திகள் வரும். அந்த அளவுக்கு தொடர் செய்திகள் என்னைத் தொடர்ந்து வந்தன. ஆனால் நான் சென்னையை விட்டு நீங்கியதும் 7 மாதங்களாக தன்னுடைய வாடிக்கையாளன் என எனக்கு நினைவுப் படுத்த வேண்டி வரும் ரிலையன்ஸ் செய்திகளை தவிர எனக்கு எந்த செய்திகளும் நண்பர் கூட்டங்களிடமிருந்து வருவதில்லை. எனவே எனது கைப்பேசி இப்போது அனாதையாக எந்த செய்திகளும் இல்லாமல் எனக்குத் தனிமையைத் தெரிவிக்கிறது.
காரணம் இலவச வசதி இல்லை என்றாலும் வரவில்லை என்பதே உண்மை.... மற்றுமொரு உண்மை :- தொலைதூர அழைப்பு என்பதால் எனக்கு அழைப்புகளும் வருவதில்லை.
என்னே தனிமையின் கொடுமை.

1 comment:

  1. நண்பரே ...
    சில்வியாவின் கவிதை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது ...
    தனிமை தான் தவிர்க்கமுடியாதது ...
    தனிமை தான் விதிக்கப் பட்டிருக்கிறது ...
    நாக்பூர் நண்பர்களிடம் பழகத் தொடங்குங்கள் ...
    எஸ்செம்ஸ் களும் கால்களும் கொழிக்கும் காலம் வராமல் போய்விடுமா ...
    வருகிறேன் தோழர்

    ReplyDelete