கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, August 22, 2012

விமர்சன(ங்கள்)ம்

சமீபத்திய படங்கள் என் பார்வையில்:

1 . "அட்டகத்தி ": - காதல் (முதல் பாதி கும்மாளம்; இரண்டாவது பாதி வெற்றிடம்)
2 . "நான் "- கல்யாணம் (பர பரப்பு, சுறுசுறுப்பு, முடிவில் ஒரு பெரிய சாதனை)
3 . "மாலைப் பொழுதின் மயக்கத்திலே" - முதலிரவு (மென்மை, கவிதை, பூவாசம், சில்லிட்ட மழை, கனவு, பெண்)

Friday, July 13, 2012

பில்லா - 2

பில்லா 2 - விமர்ச்சனம்

நான் இன்னும் பார்க்கல . . . .

 

Thursday, January 5, 2012

பெங்களூரு - 1

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு. அங்கு எனது வீதிக்கு மறு பெயர் ராஜ வீதி (யானைக்காரத் தெரு, எழுத்துக்காரத் தெரு); அதாவது சிவன், தேரில் வீதி உலா வரும் வீதி என்று விளக்கம் சொல்வர் வெற்றிலையுடன் இசை பாடும் பாட்டி மார்கள். ஏன்? தாத்தாலாம் சொல்ல மாட்டாங்களான்னு கேட்டா, தாத்தால்லாம் மனசளவுல தாத்தா ஆனாதானே கதை பேச.

அதெல்லாம் இருக்கட்டும்.....

இன்று வரை அந்த வீதிகளில் ஒரு பஸ் போக நானறியேன். ஆனால் ஒரு கல் தேர் (இப்போது சக்கரம் மரத்தால் மாற்றப்பட்டு விட்டது) தாரளாமாக மக்கள் கூட்டத்தோடு வருடம் தவறாமல் செல்கிறது.

ஆனால் இங்கு பெங்களூரில் உச்சா போகும் சந்தா இருக்குமோ என்று நான் ஒதுங்கி எனது எதிர் புறமாக சுவரில் அடிக்க இன்னொருத்தரும் ஒதுங்கினால் முதுகு உரசும் அகலம்தான் சந்து ( வீதி, தெரு). அந்த இடுக்கிலும் பஸ் ஓடுகிறது. எதிர்த்த மாதிரி யாராவது நடந்து வந்தாலே இடிக்கும்.

இதுதான் பெங்களூர் ட்ராபிக்.