கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, December 10, 2014

பாஞ்சாலிகள் - வியாசர் எனும் சித்தர்

இந்த வியாசர் மகாபாரதத்தில் மனித குணங்களை அலசி ஆராய்ந்து பாத்திரம் படைத்திருப்பதால் சித்தரே ஆவார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் பொறுமைக்கு தருமன், புகழுக்கும் அறிவுக்கும் அர்ஜுனன், காட்டுமிராண்டித்தனமான வீரத்திற்கு பீமன், உப்புக்குச் சப்பானியா நகுலன், எதிர்காலம் கணிக்க சகாதேவன் என ஐந்து குணங்களுக்கான பாத்திரம்.

இதில் மிகப்பெரிய குறியீடு பாஞ்சாலிக்கு ஐவரையும் துணை சேர்த்தது. வள்ளுவனைக் காட்டிலும் வியாசர் இந்த தருணத்தில் தான் உயர்ந்து நிற்கிறார்.

அக்காலம் தொட்டு இக்காலம் வரை, எக்காலத்திலும் பெண்களின் ஆசைக்கு அளவே இல்லை. இது இருந்தால் அது நொட்ட‌, அது இருந்தால் இது நொட்டை என்பார்களே. அது போல,

எந்த ஒரு பெண்ணுக்கும் சம்பாதிக்கும் கணவன், எப்பவும் கூடவே இருக்க வேண்டும், தைரியமானவனாக‌ இருக்க வேண்டும், வேற யாரையும் பார்க்காதவனா இருக்கணும், நாம என்ன சொன்னாலும் பொறுத்து போகணும், வெளியில் வீரனா, பெரிய புகழோடையும் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இருக்கும்.

இதை எந்த ஒரு சாமானியனாலும் சமாளிக்க முடியாது, அதற்கெனவே ஐந்து பாத்திரங்கள் தேவைப்பட்டது அக்காலத்திலேயே. அது கள்ளக்காதலாய் இப்போ வரைக்கும் தொடருது.

மீதி இருக்கும் குலப் பெண்கள் பொது இடங்களில் என் புருஷன் அந்த மாதிரி பண்றான் இந்த மாதிரி பண்றான்.. உன் புருஷன் சூப்பர்டி என சொல்லியும் சொல்லாமலும் ஏக்கப் பெருமீச்சிலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள்.