கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, December 31, 2010

மகிழ்ச்சி

அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என்பதை புள்ளியாக பார்ப்பதா, வட்டமாக பார்ப்பதா?

புள்ளியாக பார்த்தால் உண்டு, இல்லை என இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்; வட்டமாக பார்த்தால் விட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஆனால் அது ஒரு வட்டமாகவே இருக்கிறது. நல்லது, கெட்டது, நன்மை, தீமை, தவறு, சரி போன்று.

ஒரு மனிதன் அவன் அவனாகவே, தன்னிலை கொண்டு மகிழ்வது எக்காலங்களில்?

தன்னிலை என்பது எதை குறிக்கும்?
என் மூளை சுருக்கங்களில் ஒன்று இதற்கு பதிலாக,   மனையாள் வரும் போதே அந்நிலை அழிபடுகிறது என்கிறது.

மனையாள் என்பது மனைவியை மட்டுமன்றி, மனதை ஆளும் அனைத்தையும் குறிக்கட்டும். தன்னிலை எனும் அந்நிலை இழந்த எவனும் முழுவதுமாக மகிழ்வதாக நான் ஒப்பவில்லை.

ஆனால் அவன் மகிழ்ச்சி என அவளுடன் அல்லது அவற்றுடன் கொண்டாடுவதையே விரும்புபவனாக இருக்கும் பட்சத்தில்? இந்த கேள்வி பெண்களுக்கான அந்த கேள்விக்கு பதிலாகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த நிலைப்பாட்டுக்கே வருகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ பெண்கள் பிறருடன் கொண்டாடுவதையே அவர்களது கொண்டாட்டமாக கொள்கிறார்கள்.

ஆண்களைப் பொறுத்த வரை அது இல்லை.  அவர்கள் கொண்டாடுவதே இல்லை; காரணம், பெண்கள் மனம் எளிதில் திசை மாறும்; ஆண்கள் பெரும்பாலும் அந்தந்த நேரத்திற்கான உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள். உடனுக்குடன் எதிர்பார்ப்புகள் இருக்கும் அவர் எண்ணங்கள் மற்றும் செயல்களில். இதனால் பெரும்பாலான நேரங்களில் கொண்டாட்ட மன நிலை இருப்பதே இல்லை.

ஒரு விஷயம் நடக்க வில்லை எனக் கவலைப்படும் ஆண்கள் கூட்டம், அந்த நிலையை, அந்த உணர்வை கடக்கும் பட்சத்தில் உலகை, பணத்தை, உணர்வை, பெண்களை கண்டுகொள்ளாத முழு வளர்ச்சி அடைகிறார்கள்.

ஆக மகிழ்ச்சியை நோக்கி எளிதில் திசை மாறி பயணம் செய்யும் பெண்களே மனதைப் பொறுத்த வரை முதிர்ந்தவர்கள் என்பது என் தனிப் பட்டக் கருத்து.

இந்த வரிசையில் பெண்களை வைக்கும் நான் உணர்ச்சி எனும் கடலை கடக்க முடியாத சாதாரண ஆணாகவே இருக்கிறேன்.

அந்நிலையில் கடக்கும் ஆண் மதியாளன், சுயபுத்தி உடையவன், விஞ்ஞானி என தன்னுள் உள்ளவற்றை உணர்ந்தவனாகிறான்.
அடிமையாகாமல் அதை ஆட்கொள்ளத் துவங்குகிறான்

அந்த உணர்ச்சிக் கடலைக் கடக்க துவங்காத கைக்குழந்தைகள், தன் நிலையில் நிறைவு காணும் மனம் கொண்டவர்கள், நிலையே அறியாத நினைவு பிறழ்ந்தவர்கள் மட்டுமே உண்மையாக குறையில்லாமல் மகிழ்கிறார்கள்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாக, விரும்பிய அனைத்தும் பெற்று மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள்.    

என்னையும் எழுத முயல்பவனாக, என்னுள் பல மாற்றங்களை, திருப்பங்களை விதைத்த  2010 மறக்க முடியாத ஆண்டு.

Monday, December 27, 2010

வெளியேற்றம் - யுவன் சந்திர சேகர்

ஒரு நாவல் படித்து முடிக்கும் போது நாவலைப் பொறுத்து நமது உணர்வுகள் வேறுபடுகிறது. சில நாவல்களால் சந்தோசம் ஏற்படுகிறது, சில நாவல்களால் படிப்பினை (வார்த்தை விளையாட்டு), சில நாவல்களைப் படிக்கும் போது சிந்தனை விரிகிறது; அதாவது மூளையில் சுருக்கங்கள் அதிகமாகிறது. இவை அனைத்தையுமே ஒரே நாவல் தரும் போது அது கிட்டத்தட்ட பைபிள், கீதை ஆகிறது.


நாவல்களைப் படிக்க ஆரம்பித்தது அனைவரும் போல ராஜேஷ் குமாரிலிருந்து. பின்னர் நண்பனின் உதவியால் பலர் அறிமுகமானார்கள்; அந்த பட்டியல் மிகவும் பெரிதானது. வாழ்க நட்பு!!

தற்போது கிட்டிய தூரத்தில் எனக்கு யுவன் சந்திர சேகரையும் அவனே அறிமுகப் படுத்தினான்.

அதில் பகடையாட்டம், மணற்கேணி, வெளியேற்றம் படித்தாகி விட்டது. முதலிரண்டும் மனம் கவர்ந்தவை; மூன்றாவது என்னை இதை எழுத தூண்டியது.

ஜெயமோகன் படிக்கும் போது ஒரு மயக்கம் வந்தது; வார்த்தைகள் தந்த மயக்கம். இப்படியும் சிந்திக்கலாம் என்பதன் துவக்கம்; அதுவே யுவன் தனது எழுத்தைப் படிக்கும் போது அது ஒரு மாயை என்றே தோன்றும் அளவு, யதார்த்தமான வார்த்தைகளில் தீவிரமான சிந்தனைகள்.

ஜெயமோகனின் சிறப்பாய் நான் உணர்வது, துவக்கத்தில் இருந்த மயக்கத்தை நாவலின் இறுதி வரை தந்து கொண்டிருப்பார். யுவனின் கடைசி பக்கங்கள் என்னைக் கவர வில்லை. (சங்கமம் எனும் தலைப்பில் எழுதப் பட்ட முடிவு).

ஆனால் இவரது சிந்தனை வரிகள் என்னைத் திகைக்க வைத்து அதை STD செய்து நண்பனுக்கு வாசித்து மகிழும் அளவு இருந்தன. ஆரம்பத்தில் இருந்த சிந்தனை இறுதி வரை இருந்தது; தீவிரம் மட்டுமே குறைந்தது என்பது என் கருத்து.

மனிதன் லௌகீக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீரோட்டமாய் வெளியேறுவதை தலைப்புகளின் கீழ் கொணர்ந்து ஊற்று, புனல், சங்கமம் என முறையே எண்ணம், வெளியேற்றம், முடிவுக்கு தொடர்பு படுத்தி உள்ளார்.

இந்த வெளியேற்றம் லௌகீக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றம் எனப் பொது அர்த்தம் கொண்டாலும்; மனதளவில் நான் பேசும் போது என் சிந்தனை என் வார்த்தைகளைக் கேட்கும் நிமித்தம் என்னிலிருந்து என்னை வெளியேற்றி காண்பதைக் குறிப்பதாக நான் கண்டேன்;

பாத்திரப் படைப்பில் கூரிய கவனிப்பில் வியந்தேன், முழு தமிழ்நாட்டையும் அந்த இட மொழி நடையுடன் நாடகத் தன்மை கொடுத்து படைக்கும் போது படிக்கும் ஆர்வம் கூடுகிறது.

உவமைகள் அந்தந்த பகுதியை பிரதிபலிப்பது, வெளியேற்றம் மீதிருந்த அவரின் தாகத்தை வெளிப் படுத்துகிறது.

சிறந்த வரிகளை எடுத்துக் கூற விழையும் பட்சத்தில் நாவலைப் பிரதி எடுக்க வேண்டி வரும் எனும் அச்சத்தால் அந்த முயற்சியைக் கை விடுகிறேன். நான் வியந்த அனைத்து விசயங்களையும் எழுதவில்லை.

வெளியேற்றம் நாவல் இரண்டு முறை படித்து முடித்து விட்டேன்; சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. படித்து மகிழ பரிந்துரைக்கலாம்.

Thursday, November 11, 2010

காரணம் இல்லாமல் காதலும் இல்லை


இது பெண்களுக்கு எதிரானது அல்ல

பெண்கள் சுயநலக்காரர்கள் எனவும், பாதுகாப்பு வேண்டிய பச்சோந்திகள் எனவும் நண்பர்களிடையே வாதம் உண்டு. இருக்கும் பட்சத்தில் அதற்கான காரணங்களை யூகித்தேன்.


மானுடவியலின் படி முதலில் இருந்தது பெண்களின் காலம். மேலும் அந்த காலத்தில் குடும்பம், திருமணம் போன்ற அமைப்புகள் இல்லை; வேலை செல்லும், வேட்டை ஆடும் எந்த வலிமையான ஆடவனுடனும் செல்ல வழி இருந்தது. அங்கு போட்டி, சுயநலம், சதி அனைத்தும்பெண்களிடையே பெண்களை வெல்ல உதயமாயிருக்கக் கூடும். அதுவே அவர்கள் இரத்தத்தில் ஊறி இருந்திருக்க வேண்டும்.



அடுத்து, பொருள் சேகரித்து பாதுக்காப்பதற்க்காக தனக்கு என்று மனைவி என ஒருத்தியை ஆண் நியமித்து வீட்டை, குடும்பத்தை ஆளவைத்தான். அது முதல் வீட்டில் அடைபட்டாள் அவள் விருப்பத்தோடு, அது ஆண்களின் காலம் (தந்தையர்). இந்நாட்களில் பெண்களுக்கு வேறு பிடிமானம் இல்லாததால் அவள் அவனைப் பற்றிக் கொள்ளும் பொருட்டு சதி செய்ய வேண்டி இருந்தது சுயநலம், பாதுக்காப்பிற்காக. மேலும் அவள் தன கணவனானவன் , அவன் அம்மா, குழந்தைகளிடம் பாசம் காட்டும் போது பற்றுதல் மட்டும் இல்லாமல் பணம் காசும் பகிரப் படும் என்பதால் சதி செய்கிறாள். நல்ல ஆடவனை தேர்ந்து எடுக்கவும் துணிகிறாள்.


தற்காலங்களில் அனைவரும் வெளியில் செல்லும் போதும் அந்த ஒரு பயம் பெண்களின் மனதில் விலகாமல் பாதுகாப்பு தேடுகிறது. அதனாலே விரைவில் மூளை சலவை செய்யப் படுகிறார்கள். காதலும் இடம் மாறுகிறது.



முடிவில் காதல், பாசம் என்றால் என்ன ??


Monday, October 18, 2010

பூக்களின் புலம்பல்

புலம்பல்



  • உனக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்றெண்ணி முள்ளே இல்லாமல் முல்லையாய் வந்தேன். அவள் பல்லில் பார்க்கிறாய் என்னை # பூக்களின் புலம்பல்
  • மயிர் விழுந்தால் உயிர் துறக்கும் கவரிமான்; இதழ் இழந்தால் உயிர் துறப்பேன் நான் # பூக்களின் புலம்பல்
  • நீ அவர்களை பார்த்து ரசிப்பதால், எனக்கு பெண்களைப் பிடிப்பதில்லை # பூக்களின் புலம்பல்
  • பூத்ததும் மணம் பெண்களுக்கு; பூத்ததும் மரணம் எங்களுக்கு # பூக்களின் புலம்பல்
  • உனக்காக காத்திருப்பேன் எனக் கூற இயலாது; வாடி விடுவேன், ஓடி வா # பூக்களின் புலம்பல்
  • தோட்டத்தில் கூட்டமாய் இருக்க வேண்டாம்; உன் வீட்டு தொட்டியில் தனித்திருக்க வரம் கொடு # பூக்களின் புலம்பல்
  • கூவிகூவி விற்கப் படுகிறேன்; நானும் விபசாரியோ! இல்லை,நவீன சுயம்வரம் மூலம் ஒரே புகுந்த வீடு. பின் மரணம். பத்தினிதான்#பூக்களின் புலம்பல்
  • அனைத்து இடங்களிலும் பூக்கும் நான் உன் பாதம் படும் இடங்களில் பூப்பதில்லை; பூத்து என்ன பயன் # பூக்களின் புலம்பல்
  • பூ என சொல்லாதே; மலர் என சொல்; சிறிது நேரம் கூடுதலாக எனக்கு ஆயுள், உன் வாயில் # பூக்களின் புலம்பல்
  • நீ பறித்தாய் சுக வேதனை; அவளிடம் கொடுத்தாய் மரண வேதனை # பூக்களின் புலம்பல்
  • காதலியால் மலைக் காட்டுக்குத்தான் உடன் வர முடியும்; எந்த காடானாலும், இடுகாடானாலும் நான் உன்னருகில் # பூக்களின் புலம்பல்
  • பொதுவாக மின்னஞ்சலில் எனை அனுப்பும் போது மணம் வீசுவதில்லை என்பதை நான் குறையாக கொண்டதில்லை; உன் இன்பாக்ஸ்இல் வரும் வரை#பூக்களின் புலம்பல்
  • மிதப்பாய் இருந்தேன் கறுப்பே என்னிடம் இல்லை; உன் மனம் பார்த்ததும் பிரமித்தேன் கறுப்பு எனும் வார்த்தைக்கு அர்த்தமே இல்லை#பூக்களின் புலம்பல்
  • பூக்களைப் பறிக்காதீர்கள் என போர்டு வைத்தவனை, கொலையும் பண்ணுவேன் உன்னை அவன் தடுக்கும் போது # பூக்களின் புலம்பல்
  • குரங்கு கையில் இருக்கும் போது வலிக்க வில்லை; உன் கையில் இல்லையெனும் போது வலி பொறுப்பதில்லை # பூக்களின் புலம்பல்
  • 15 வயசு வரைக்கும் உனைக் காத்திருக்க வைக்க முடியாமல், 12 வயதிலேயே பூக்கிறேன் நான் # (குறிஞ்சி) பூக்களின் புலம்பல்
  • உன் கையிலிருந்து பிரிந்து கடவுளிடம் போவதானாலும் மனம் ஒப்பவில்லை எனக்கு. # பூக்களின் புலம்பல்
  • அவளை மயக்க என்னை வாங்கி செல்கிறாய், என்னை மயக்கியது நீ என்பதை அறியாமல் # பூக்களின் புலம்பல்
  • உன் கட்டிலில் என்னைத் தொங்க விட்டு அவளை அணைக்கிறாய் முதலிரவில். பூ பாவம் பொல்லாதது # பூக்களின் புலம்பல்
  • அவள் எந்தன் மணத்திற்காக விரும்புகிறாள் ; நீ என் மனதிற்காக விரும்பு # பூக்களின் புலம்பல்
  • உன் கரங்களால் மரணம்; எனக்கு அதுவே வரம் # பூக்களின் புலம்பல்
  • காதல் உணர்வு தூண்ட, மல்லிகையை மட்டும் ஏன் கூறினர்? # பூக்களின் புலம்பல்
  • அல்லி, முல்லை, மல்லிகை, குறிஞ்சி என பல பெயரு; ஆனால் நீதான் எனக்கு உயிரு # பூக்களின் புலம்பல்
  • மணம் என்றால் கையிலிருந்து தலையில் எறிகிறார்கள்; பிணம் என்றால் தலையிலிருந்து சாலையில் எறிகிறார்கள் # பூக்களின் புலம்பல்
  • எங்களைக் கசக்குவது பிறர் கண்களுக்கு கசக்கலாம்; உன்னில் கசங்குவது என்றோ ? # பூக்களின் புலம்பல்
  • சூரியனைப் பார்த்ததும் விரிகிறேன் மலர்வதற்கு ; உன்னைப் ஆர்த்தும் குனிகிறேன் வெட்கத்திற்கு # பூக்களின் புலம்பல்
  • கடவுள் என்னைப் பார்த்தால் கருணைதான் பிறக்கும்; நீ என்னைப் பார்க்கும்போதுதான் வாழ்க்கைக்கு அர்த்தமே பிறக்கும் # பூக்களின் புலம்பல்
  • அவள் தலையில் மணம் வீசுவதை விட உன் கையில் பிணமாவதே விருப்பம் # பூக்களின் புலம்பல்
  • பூஜை அறையை அலங்கரிப்பதை விட, உன் படுக்கை அறையில் கசங்குவதே சுகம் # பூக்களின் புலம்பல்
  • செடியிலேயே இருந்தா காய்ந்துவிடுகிறேன் ; உன் மடியைக் கொடு சாய்ந்து கொள்கிறேன் # பூக்களின் புலம்பல்





Monday, September 27, 2010

இந்த கடலில் கப்பல் ஓடவில்லை

                      தமிழ் திரையுலகில் நடித்தவர்கள், நடிப்பவர்கள், நடிக்க முயற்சி செய்பவர்கள் என அனைவரையும் பார்த்தாகி விட்டது தமிழ் ரசிக பெருங்குடி மக்கள். அதை வரிசைப் படுத்த எண்ணினால் என் முந்தைய பதிவை விட பக்கங்கள் செல்லும்.


ஆனால் திறமையானவர்கள் நடிகர்களின் திறமையை முழுவதும் வெளிக் கொணர இயலாத நமது தமிழ் திரையுலகம் பற்றி என்னில் ஒரு ஆதங்கம் உண்டு.

அந்த வரிசையில் முதலில் ஜெயராம் இலிருந்து துவங்குவோம்;

இவரை கமல் தவிர மற்ற எவருமே சரியாக உபயோகப் படுத்தியதாக நான் அறியேன். இரண்டுக்கும் உதாரணமாக, தெனாலி, பஞ்ச தந்திரம் முதலியன கமலிடம் மேலும் ஏகன் கமல் இல்லாமல்.

இரண்டாவது ஸ்ரீமான். இவரையும் அதே வரிசைதான், சிறப்பான குணசித்திர நடிகர். ஆனால் உபயோகம் மிக குறைவு. கரணிலும் சிறந்த கதாநாயகன் ஆகும் திறமை மிக உண்டு.

மூன்று தலைவாசல் விஜய். ஐவரும் என்னைக் கவர்ந்த ஒரு கலைஞர். தேசிய விருது வாங்கும் அளவு திறமை இருந்தும் எதோ ஒரு காரணத்தால் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளார்.

நான்கு யூகி சேது , ஒரு நல்ல கலைஞனை தமிழ் திரையுலகம் இழந்தது என்றே சொல்லலாம். அவரது பஞ்ச தந்திரம், ரமணா இரண்டிலும் நடிப்பு மிக அருமை.

ஐந்து நாசர், பெரும்பாலான படங்களில் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தாலும் கமலைத் தவிர சிறப்பாக இவரை வெளிக்கொணர்ந்தவர் மிக குறைவு.

ஆறு ஜகன், இவர் வடிவேலு, சந்தானத்தைக் காட்டிலும் சிறந்த ஒரு நகைச்சுவை/குணசித்திர நடிகராக வர வாய்ப்பு மிக அதிகம்

ஏழு சந்தான கிருஷ்ணன் , ஐவரும் கமலின் பெரும்பாலான படங்களில் நடித்தவர். மற்றவர்கள் இவரை தவற விட்டனர்

எட்டு மௌலி, இவர் தனது சொந்த படங்களைத் தவிரவும் நடித்த தமிழ் படங்கள் மிகவும் குறைவு.

ஒன்பது திலிப் பழைய நடிகர், நல்ல நடிகர் பெரிதாக வெளி வரவில்லை



இந்த வரிசையில் இன்னும் பலர் இருக்கலாம். இந்த முப்பது நிமிடத் துளிகளில் நினைவில் நின்றவர்கள் இவர்கள். நினைவு வரும் போது பகிர்கிறேன்.

இந்த வரிசையில் தற்போது நடித்து வரும் இளவரசு(சென்னை 28 , களவானியில் நாயகன் அப்பா ) , எம் எஸ் பாஸ்கர் போன்றவர்கள் வாராமல் இருந்தால் மிக்க நன்று


பின் குறிப்பு: இது தர வரிசைப் படுத்துதல் இல்லை..

விவாத மேடை

நானும் எனது நண்பர் ஒருவரும் மிகுந்த வேலைகளுக்கு நடுவே, த்வீட்டர் உலகையும் தவிர்த்து ஒரு  விசயத்தை விவாதிப்பதை ஆராய்ச்சி செய்தோம் , விளைவு தங்லிஷில் உங்களுக்காக,


Raja: boossss

vanakkam

Sent at 2:45 PM on Monday

Selvarajan: sollunga sir..

Sent at 2:48 PM on Monday

Raja: enna boss mariyathai ellam palamaa iruku

Sent at 2:52 PM on Monday

Selvarajan: sorry..

had gone for a meeting da..

Raja: boss.. enna boss

periya periya vaarthai ellam pesureenga

Selvarajan: periyavanga neenga.. mariyadhai kudukkanum illaiya..

Raja: sorry nreenga,,, meeting nreenga

Selvarajan: look at them again.. ellam chinna chinna vaarthaigal..

Raja: oru thadava paarthathukke kannula thanni vanthuduchu boss

innoru murai paarka mudiyathu

Selvarajan: ungalukku edha paatha pidikkum nu theriyum..

:P

Raja: inam inaththai ariyum

Selvarajan: athanala thaan unakku enna pathi theriyalayo :P

Raja: unna pathi enakku therilenna, enna pathi unakum theriyathe boss.

according to science

.........

Selvarajan: yea.. true..

but as per dualism..

i can 'understand' and guess wats the other side..

Raja: same thing s possible with other side

????

Selvarajan: edhellam enakku pidikkudho, adhellam unakku pidikkadhu..

kannula thanni varum..

suththama aagaadhu..

:)

ellam oru vagaiyana puridhal thaane..


Raja: unakkku pidiththau enakku pidikkathunnu nee ninakrathunaala

enakku pidikratha pidikkathunnu solli unakku pidikratha asingap paduththa virumbaama

unkitta pesum pothu unakku pidiththatha

enakku pidiththathaa

aakkikollalaam illaya

ellam oru understanding thaane


Selvarajan: "aakkikonduvittal" adhu eppadi pidithathaagum? pidithathaakkapattadhudhaanae?

"pidithathaakkapattadhudhaanae"

edhaiyum naama aakka koodadhu... adhuva amaiyaum...

Raja: pidiththathaagappattathu pidiththathu aagum pothu

Selvarajan: enna namba naan solradhu

Raja: pidiththathu enak kooruvathuthaane murai

oru seyal

seiyap padum mun

seithathaaga kollap padugirathu

Selvarajan: aakkapaatta piraage ondru pidithupoganum endral, adhu aathmaarthamaaga oruvanal yetrukolla pattadhaaga urudhiyaga koorivida mudiyadhu..

allava?

Raja: aakkappatta ontru pidiththu povathu enum pothe athu etruk kollap padugirathu

allavaa?

Selvarajan: ondru yetrukollappadalam.. aanal adhu endrum iyarkaiyai amaindhadhai pol aagivida mudiyadhu.. adhu tharpodhu pidithadhe eninum!!

Raja: iyarkaiyaai amaivathu enbathu ontrum illai. manithan enum koodaiyil pidiththa visayangal piranthathilirunthu allip podapadugirathu

amma, appa, sontham utpada

avavre

pidiththathu enbathu kaalangalaip poruththu maarum

pidiththathaaga irunthathu pidikkaamal pogalaam

pidikkaamal

irunthathu pidikkalaam

kaathal pola

Selvarajan: "maarum"... adhu iyrarkai.. "maarkollpaduvadhu" maaruvadhai pol sirappagadhu..

Raja: maaruvathu enbathu maatruvikkap paduvathinaaleye varugirathu

Selvarajan: maaruvadhurkum, maartrikollapadivadhurkum ulla vettrumai.

Raja: iyalbaai maaruthal enbathum etho oru unthuthal irukkum patchatthil mattume saaththiyam

Selvarajan: erandum seivadhu yaar enbadhai poruthadhu.. enakku maariyadhai nan seiyya villai.. adhuve ennoruvanukku maartrapattirukkiradhu..

ennoruvan maatriyadhu, enakku maariyirukkiradhu..

Raja: iyalbaai maaruvathum unthuthal illamal nadakkathu

unthuthal pirar seigai , iyarkai

ethuvumaagavum irukala,m

Selvarajan: aaga, enno soola varum maatrakgalukku nan kaaranamaagadhavarai, adhu enakku oru maatramae.. eppodhu nan maatrugiranae, andha maatram iyarkaiyil irundhu anniyapaatu pogiradhu..

andha unthudhalukku nan kaaranamai irundhirukka maattem.. adhu "maatram"..

illavidil, adhu "maatrapattadhu

Raja: aaga athu " maatram"

maatrap pattathum maatram piraraip poruththa varai

Selvarajan: unthudhalae illamal oru anuvum asaiyadhu.. aaduvadhu yaar, aattuvippadhu yaar enbadhe vaazhkkai thathuvathai niyayapaduthugiradhu..

Raja: intru\

aattuvippavan netru aattuvikkap padugiraan , athuthaan unthuthal

Selvarajan: aanal adhu enakku "maatram" aagadhu.. pirarukke maatram..

Raja: intru aadubavan naalai

aattuvippaaan

aaga maatram enbathu maatruvikkap paduvathu ... iyarkaiyaai, seyarkaiyaai kaaranam irukkalam

iyarkaiyaai enbathu manitha seyalgalukku apparpattahu

soozhnillai

kaaranamaaga irukalam

Selvarajan: ungal karuthu adhuvai irukkalam... en karuthu enakku innum sariyagavae padugirahu...

Raja: atharkum maaruthal thevai

Selvarajan: thinkkappadum maatrathai edhirkiradhu polum.. thevai irundhal panithirukkumae..

Raja: puriyaamal iruppathum kaaranamaaga irukalaam

Selvarajan: indhavidhamana edhikaruthai purindhukolla koodiya thelivum, adhanai saripadutha mudiyadha iyalamai thotruvitha varuthamum kaaranamaga irukkalam..

Raja: irukalaam

Selvarajan: :)

Raja: varunthathakkathu

purithalaip puriya vaippathu purintha oruvanukku azhagu

Selvarajan: unga "varunthathakkadhu" en karuthai migavum azhagaakkiyadhu.. mikka nandri..

vaarungal vidiyalai nokki..

Raja: varunthathakkathu enabathu nanbanin

iyalaamai nokkum pothu

Selvarajan: enna seivadhu thozha, unmaiyai purivaippadhenbadhu avvalavu periya kaariyum...

vivekanandar, periyar thottu idhe nilai thaanae..

Raja: unmai elithaagap purinthu vidum

vithandaavaatham purivathillai

adhai patri kavalaipadaamal, nan payanippom..

Raja: maatram thevai

iyarkaiyaagavo, seyarkaiyaagavo

thannil iruntho

piranin vazhiyaagavo

Selvarajan: suthanthiram vendumendrar gandhi.. suyamariyadhai vendumendrar periyaar... palichendra andha unmaigal purindhuvittadha...

aththanai periyorum, kadum padhai nadandhaare..

Raja: suthanthiram vendumentrum , siyamariyaathai vendumentrum arasiyal seiyaamal irunthirunthaal

sevai vilangi irukkalaam

athu arasiyalaakkap pattu vittathu

iruvarum seththi athil

Selvarajan: oru eliya unmaiya, samudhaayamae ottumothamaga marandha oru unmaiyai, muzhu veechil makkalidam kondu serkum nokkamae arasiyal namba..

Raja: kologai enabthu veru kolgai velippadu enbathu veru

kolgai*

Selvarajan: arasiyalakkappattadhu?

??? aaga arasiyal alladha ondru thaane adhu? :P

Raja: aradiyal illatha ontru arasiyal aakkap padum pothu

mathippizhakkum

aanai theresa

annai theresaa

arasiyal seithirunthaal

Selvarajan: aanai arjun padam nanbarae..

Raja: vetri petrirukkalaam

aanaal sevai veli vanthirukkathu.. athuvum arasiyal

aagi irukkum

Sent at 4:15 PM on Monday

Selvarajan: mikka nandri nambarae... namadhu "eliya unmaiyai eduthu solgaiyil yerpadum varuthangalai kavalai padaamal payanippom" urayaadalai etrukondamaikku... ippodhu ungal viruppappadi "arasiyal" patri pesalam.. marubadiyum nadri.. en vaadhangalai purindhu kondu veru kaatchikku maariyadharkku..

:)

ungalaippol oru silar indha kadum payanathil, perum vazhi thunai...

eliya unmai aayinum, nan payanathai inidhe thodaruvom!!

Raja: illai nanbare ungal purithal thavaru

Selvarajan: arasiyal patriya ungaludaiya karthukkalai aavalodu edhirpaarkiren..

Raja: purithalai vilanga vaikka

iyalaamai kuriththa ungal opputhalai etren.

ungal nilaikku varuththam

theriviththen

Selvarajan: oru murai matra karuthukkalaiyum nidhanamaga yosithu paarungalen...

enna seivadhu, eliya unmaigalai sevi madukka kooda evvalavu periya porattam vendiyulladhu..

Raja: ithaiyum puriya vaikkavillai neengal.. entha karuththukala matra karuththukkal

engreergal

karuththukkal entru varum pothu anaiththum karuththukkal

Selvarajan: indrai ungal varutham, naalai ungal velichamaga ennuvom..

Raja: matra karuththukkal enum pothu kadalalavu selgirathu vaarththai

oru visayaththai nokka kooriya paarvaiyum thelivaana sollum vendum nabare

nanbare *

Selvarajan: ungal manam thelindha, manam parandha oru nilaiyil naam marubadiyum vivadhippom nanbarae...

Raja: ungallathu purithal enakku piramippu alikkirathu.. nallai padiththu varuvathaaga oppu kondeergal

velichaam kanbom nabare ... ilakkai nokkiya nam payanam thodarattum

kai korththu

inaiyum kaigal , piriyaamal , karuththu veru padalaam

manam veru padaathu

vivaathippom

Selvarajan: padithuvaruvaadhaga??? engirundhu piditheer adhai??

Raja: //indrai ungal varutham, naalai ungal velichamaga ennuvom// naan ungalai ninaiththu varuththam theriviththaum

Selvarajan: nan pesiyavaigalukku mattum badhil alithal vasithiyaga irukkum.. :P

Raja: intha thodar ungalathu

intru

varuthtam konda thaangal naalai velicham adaiya oru nalla vazhi

padippathu

nalla puththgam mattume sirantha

aasaan, nanban

padiyungal , theliyungal karuththukkalai

Selvarajan: me: ""indrai ungal varutham, naalai ungal velichamaga ennuvom..""

padippadhu engirundhu vandhadhu anbare??

Raja: meendum mele padikka vendugiren enathu thangalukkaana iruthi seithiyai

Selvarajan: "padippathu"

idhai nan solla villaiye?

enge, andha thdarai muzhumaiyaga koori porul koorum parpom?

Raja: vaarthaigalin naduve vaarththaiyai thedum pothu

vaarththai mattume kidaikkum

aazhntha porul kidaikkathu

satru ul sentru porul paarkkum pothu

Selvarajan: solladha vaarthaigal innum kadinam, theduvatharkku.. :P

Raja: namathu sinthai visaalamadaigirathu

Selvarajan: vaarthai engo pidithu kondu aadugireer...

sonna vishayamgalai mattum etrukondal podhum...

solla vaarthaigalai piragu paarthu kollalam..

umadhu kuzhappamana mananilaiysi idhu vilakkugiradhu..

mudindha varai muyarchippom...

Raja: oru visayaththil thelivu irukkum pothuthaan nanbare

Selvarajan: vidunga paathukkalam..

Raja: sinthanai kooriya vazhiyil sellum

vaarththai vilaiyaattil ubayogam illai

porul vilaiyatatte

Selvarajan: thelivu irukkum podhu, thappu thaapa purinjippom ah???

:P
Raja: sirappikkum

Selvarajan: vaarthai vilaiyatta?? andha vaarthaiye illa namba!!

:P
Raja: naalai velicham ena eppadi koorineer

thelivaana arivu

naali kidaikkum entru thaane

thelivaana arivu enbathu

evaaru kidaikkum

Selvarajan: "indru ungal varutham, nalai velichamaga ennovom"

Raja: purinthavargaludan uraiyaadum pothu

Selvarajan: ungal varutham puridhalin ezhuchiya nan paarthuvitten...

adhu nadakkadha??

Raja: nalla puththagangalai padikkum

pothu

Selvarajan: neenga theilvu pera mudiyadhu??

Raja: kobam vendaam nanbare

kobam

kuzhappaththai vilaivikkum

amaithi amaithi

Selvarajan: andha puthagangilavadhu, irukindra vaarthaigalai mattum padiyungal :P

Raja: meendum athe solgreergale

illai nanbare

puththagam padippathu moontru vagai

1,

Selvarajan: piditha vaarthaigalai korthu ungaludaiya puthagam ezhudhunga..

Raja: meivathu

2, padippathu

3, padiththu seeranippathu

ithil irandaavathu ungal karuththu

Selvarajan: eppodhu veru oru vivadhathirukku sendru vitteera???? polladha aalaiya neengal.. :P

Raja: moontraavthu en karuththu

Selvarajan: adheppadi???

illa oru vishayathai solgireer.. idhu thaan seeranippadho?

:P
Raja: puththagaththil ulla vaarththaigalai mattume padippathu

Selvarajan: nanbarae.. oru udhavi...

irukireera?

Raja: enbathu

padippathu mattume

purithal aagaathu

seeranippathu purithal, sinthanai velipppaduthal

Selvarajan: adhellam sari.. eppadi "padithuvaruven" endru porul kondeer????? badhil kanda pinnar, marubadi pesalama?

Raja: antha idangalil athai veru ontrudan unmaiyaaga korththu paarpathu

Selvarajan: kaaranam "seiyya" umakku neram thevai endru thondrugiradhu..

nanbarae.. ennudan pesalamae.. yen thaniyaga pesugireer..

Raja: thaangal vilguvathaaaga irunthaal sollungal nanbare .. pakkathu ilaikku paayaasam ketkaatheerrgal

Selvarajan: mikka nandri.. kadaisiyill.. enakku badhil alithatharkku.... :P

thangalal mudindhal, enganum "padithu varuven" ena porul kondeer..

koora mudiyuma??

vera thathuva gnangalai nam adhan piragu pesala..

????

Raja: naalai velicham entraal kundu pulp eriya vittu varuveergal ena porul kolla vendumo

Selvarajan: ungal nilamaiyai arindhvananen nan ippodhu... evvalavu neram vendumaanalum eduthu kollungal... thayavu seidhu kaaranam koorungal...

"indru ungal varutham, naalai ungal velicham".......... idhil nan padippadhu engirundhu vandhadhu???

ungal mozhi nadai, mananilaiyai arivikkaradhu..

porumai!!

thamil therindha sila natpidam vivadhiyungal...

neer valluvanin vazhiyaga irukkalam... aanal tamil naattil, kamban veetu kattuthariyum kavi paadume...

meendun sandippom!!

nalam pera vaazhthukkal..

kavalai vendam...

john nash enbavae thelivagum bodhu, kavalai edharkuu...

meendum sandippom!!

:)

Take Care, namba!!

:)

Raja: kobam iyalaamaiyin velippaadu

iyalaamai vaarththagallal varugirathu

irukkaattum nanbare

sentru padiththu

mentru

vizhungi

seeranam seithu

varuga

velicham kaanbom


இன்னும் தொடர்ந்தது

ராணுவம் என்றொரு வேலை

நான் சில நாட்களுக்கு முன்பு நாக்பூர் நகரிலிருந்து சென்னை மாநகரம் செல்ல விடுப்பு எடுத்து (சம்பளம் இல்லா விடுப்பு) தமிழ்நாடு அதி விரைவு வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ( தமிழ் பதிவு என்பதால் உங்களை நோக்கி வந்து கொண்டிருந்தேன் என்பதே சரி). அந்த அறையில் என்னுடன் தலைநகரிலிருந்து வந்து கொண்டிருந்த திரு.பரமசிவன் என்ற ஒரு ராணுவ வீரர் பயணம் செய்தார். அவர் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி.

அவருடன் நடந்த உரையாடலில் எனக்கு கிடைத்தவை,

  • அவர் 13 ஆண்டுகளாக பணி செய்கிறார்.
  • பத்தாவது படித்து இருக்கிறார் (பத்தாவது இவருக்கு பத்தியது ராணுவத்தில் சேர)
  • எல்லைப் பாதுகாப்பு படை என்பதால் அவரது வேலை பெரும்பாலும் நமது எல்லை ஒட்டியது.
  • சீன, பாக்கிஸ்தானிய, பங்களாதேசிய எல்லையில் பணி செய்து இருக்கிறார்

அவரது அந்த புகைப்படங்களை பெருமிதத்தோடு காட்டி வந்தார்.

மற்ற எல்லைகளில் பணி செய்வதை காட்டிலும் பாக்கிஸ்தானிய எல்லையில் பணி செய்யும் போது தனித்து விடப் பட்டதாக உணர்ந்திருக்கிறார்.

முக்கியமாக குபோரா என்ற மலைப் பகுதி காஷ்மீரத்தில். சுமார் ௧௮௦௦௦ அடி உயரம். அங்கு வேகமாக நடந்தாலே பிராண வாயு தேடலில் நம் பிரானமே போய் விடும். மேலும் அங்கு மற்ற அடிப்படை வசதிகள் என்று (மின்சாரம், உணவு) ஏதும் இல்லை. காடு விலங்குகள் புலி, சிறுத்தை அங்கு சாதரணமாக விளையாடும். ( புலி மனித இனத்தை உண்ணுவதில்லை என்பது அவர் வாயிலாக எனக்கு கிடைத்த செய்தி. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்). உணவு மிக சிறப்பாக கிடைக்கும் என்றாலும் காலையில் குதிரைகள் அந்த மலை அடிவாரத்தில் இருந்து பொதி சுமந்து வருமாம் மாலைக்குள், அடுத்த நாள் மூன்று வேலை உணவை சுமந்து. அவர்கள் பயணமும் குதிரையில் தான்.

அவர் தங்கும் இடங்கள், வேலை அனைத்தும் என்னை கலங்க வைத்தது. ஆனால் அவரது பதில் நாட்டுப் பற்றை வெளிப் படுத்துவதாக இல்லை. "பத்தான் கிளாஸ் படிச்சா இந்த வேலை கிடைச்சதே பெருசு" என்றார். அது சேவை இல்லை வேலை என்பது புரிந்தது. ஆக சுரங்கங்களில் வேலை செய்பவரும் ராணுவத்தில் வேலை செய்பவரும் ஒன்றே. வேறு வழி இல்லை அதனால் இந்த வேலை.

ராணுவத்தில் வேலை செய்பவர்களை குறை சொல்வது நோக்கமில்லை. ஆனாலும் நாட்டுக்காக ராணுவம் என்பது வெகு நாட்களாகவே ( நமது சுதந்திரத்திற்கு பின்னர் ) இல்லை. இது கட்டின கணவனை விட்டால் வேறு வழி இல்லை பிழைக்க, என பிள்ளை பிறக்கும் வரை நம்பி வாழும் பெண்ணினத்தைப் போன்றது.

மேலும் முக்கியமானது, அங்குள்ள மக்களைப் பற்றி அவர் சொன்னது,

இந்திய ஆட்களுக்கு தண்ணீர் கூட தருவதில்லையாம். கல்லால் அடிக்கவும் செய்வார்களாம். கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது கூட பாக்கிஸ்தானிய சட்டை அணிந்து " பாகிஸ்தான் ஜிந்தாபாத் " எனும் கோஷம் தான் பலமாக இருக்குமாம். ராணுவ வீரர்களிடமிருந்து திருடியும் செல்வார்களாம்.

அவர்களை மக்கள் எனும் மாமிச பிண்டங்கள் என்பேன்

Thursday, September 23, 2010

இசையின் இசை

இசையைக் கேட்பது என்பது கருவறை முதல் கல்லறை வரையிலும், குடிசை மட்டும் இல்லாமல் மாளிகை கூடங்களிலும் , பசித்தவனுக்கும் புசித்தவனுக்கும் பொதுவான ஒரு விஷயம். பொழுது போக்கு, நேரக் கழிவு என பலவாறு கொள்ளப் படும்.


சிலருக்கு படிக்கும் போது இசை, சிலருக்கு நடக்கும் போது, சிலருக்கு வேலை செய்யும் போது, சிலருக்குத் தூங்கும் போது , சிலருக்கு சமைக்கும் போது ( ஆண்கள் , பெண்கள் இருவருக்கும்), என்னைப் போன்ற சிலருக்கு அனைத்து செயல்களின் போதும் இசை.


இந்த களத்தில் விமர்சனம் பண்ணவும் இல்லை. பண்ண விழையவும் இல்லை.


இவ்வாறு என உணராமலேயே நம்மை முழுவதுமாய் ஆட்கொள்ளும் சக்தி கொண்ட இந்த இசையை கொண்டாட மட்டுமே வந்தேன்.


நான் பாரபட்சம் என்பதை துளியும் பார்ப்பதில்லை. TMS, எம். ராஜா காலத்திலிருந்து, இப்போது கார்த்திக், கதிஜா வரை கேட்பது என்பது எனக்கு நீர் குடிப்பது போன்றது.


இந்த விசயத்தில் இது காதலிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது தெளிவு. காதலில் துன்பம்தான் இறுதி என்று நண்பன் சொன்னாலும் அதை அனுபவித்து படும் அவஸ்தைகள் போலில்லாமல், சுகம் இதுவென சொல்லத் தெரியாமல் சுகத்தை மட்டுமே கொடுக்கும் இசையை நாம் ரசித்து கொண்டு இருக்கிறோம்.


அதுவும் சூழ்நிலைக்கு ஒப்ப, கேட்கக் கூடிய வகையில் திரை இசைப் பாடல்கள் பல.


சிலப் பாடல்களைக் கேட்கும் போது , எழுந்து ஆட தோன்றுகிறது . அந்தக் காலத்தில் பாட்டு பாடவா ஜெமினிஇலிருந்து இந்த காலத்தில் சிம்பு பாடல்கள் வரை


தேர்வுகளில் வெற்றி பெறும் போதோ , வேலை செய்யும் இடங்களில் சம்பள உயர்வோ கிடைக்கும் போது நண்பர்களோடு அனுபவிக்க சிறந்த பாடல்கள் மடைதிறந்து முதல் பல என சொல்லலாம்.


கொண்டாட்டம் சிறிது அதிகமாகி மது வரை செல்லும் போது கூட ஊறுகாயோடு இது ஒரு பொன் மாலை பொழுது கேட்கும் போது மகிழ்ச்சி உச்சம்.

நான் புதிதாக ஒலிபெருக்கி வாங்குகையில் எ .ர ரஹ்மான் பாடல்கள் , ஆங்கில பாடல்கள் கேட்கிறேனோ இல்லையோ ராஜா ராஜாதி ராஜா என அக்னி நட்சத்திரமும் , சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என எம்.எம். காம ராஜனும் கேட்காமல் இருந்ததில்லை.

காதல் சுகத்தில் கனவு காணும் போது , பனி விழும் மலர் வனம் முதல் , மாலை என் வேதனை கூட்டுதடி வரைக் கேட்பது சிறப்பு.

மனதிற்கு உந்துதல் வேண்டும் போது கவிதைப் பாடு குயிலே இனி வசந்தமே என உயரிய வரிகளில் இசைநயம் சொட்ட கேட்பது சுகம்.


பயணத்தின் போது செந்தாழம் பூவிலிருந்து , என்றென்றும் புன்னகை வரை;

இதையெல்லாம் இல்லாமல் சிலப் பாடல்களைக் கேட்கும் போது எந்நேரங்களிலும் மனதினில் மகிழ்ச்சி நம்மை அறியாமல் வரும். அதில் மாங்குயிலே, அக்கம் பக்கம் பாரடா பாடல்களும், ஊரு சனம் தூங்கிடுச்சு என ஜானகியின் மதுர குரலும், இன்னும் பல பாடல்கள் இளையராஜாவின் தானம் நமக்கு.

இன்னும் நிறைய கூறலாம் . தொடரலாம்

Sunday, August 8, 2010

எனது கனவு

தேரில் பயணம், கிடைத்த வரை இடம் என எனது தேரில் எனது நண்பனும். அவனுக்கு ஆசையோ என்னவோ எனது சாரதியாக வருகிறானாம். எனது நண்பனை அவ்வாறு ஏன் சொல்ல வேண்டும். அவனுக்கு ஆசையாம் குதிரை ஓட்ட அதனால் அவனே எடுத்து கொண்டான் என்பதே சரி.

முல்லைக்கு தேரைத் தந்து, பின்னாடியே காவலாளியை அனுப்பி இருப்பான் அந்த பாரி. ஆனா நான் அப்படியில்லை. என் நண்பனுக்கு தேர் என்ன ஊரே குடுப்பேன். அது என்னோடதா இல்லாதவரை எனகென்ன கவலை.

வானவெளியில் மிதப்பது போன்று எனது தேர் பயணம். சுற்றிலும் விண்மீன்கள் கண் மூடி மூடி திறக்க வரும் சப்தம் இரைச்சலாக கேட்கிறது . மிக அருகில் இருப்பதாலோ என்னவோ.

எதிரில் நாராயணா நாராயானா என்று நாரதரும் செல்கிறார். செல்லவில்லை என்னகாரியமோ, நிற்கிறார் அவர்.

சில்லென்ற காற்று எனது முகத்தில் முத்தமிட்டு கொண்டே இருக்கிறது. வாயுப் பகவான் மகள் போலும் . இப்படி கொடுக்கிறாள் அள்ளி, வாய் வலிக்காதோ. நல்ல வேளை, வாயுப் பார்க்கவில்லை இல்லையெனில் புயலெனப் பாய்ந்திருப்பான் .

முத்தம் மட்டும் சபதமில்லாமல், சுகம். இதற்கிடையில் அது யாரது அழகான தேவதை என்னை நோக்கி வருகிறாள். வாயுவின் மகளை விலக்கி கொண்டு. கொள்ளை அழகு. தேவ கன்னிகையோ . இல்லை தேவ மாதா, கையில் குழந்தை இருக்கிறதே. எனக்கு அருள் பாளிக்க வருகிறாள் போல. கையில் அட்சயப் பாத்திரம் வேறு.

பின்னால் எல்லோரும் ஆரவாரம். எனது நண்பனைப் பார்க்கிறேன் . திரு திருவென முழிக்கிறான்.
"டேய், வண்டி மூவ் ஆகா மாட்டேன்குதுடா. சிக்னல் ல மாட்டிகிட்டோம். பின்னாடி எல்லாரும் இந்த கத்து கத்து கத்துறானுங்க. எதோ அருந்த பன்றி மாதிரி "

என்னை நோக்கி வந்த பிச்சைக்காரி வேறு, பைசா கேட்டு, பாத்திரத்தோடு தொந்தரவு. எதிரே நின்று " கிளம்பு கிளம்பு " என காவல்காரர்.

நானும் நானும்

சென்ற வாரம் 4.8.2010 தேதியிட்ட ஆனந்த விகடனில் கோபி நாத்தின் அறிவுரை "நீயும் நானும்" பக்கத்தில் வந்துள்ளது. அனைவரும் அறிந்த ஓன்று என்றாலும் சொல்லத் தகுந்தது.

ஆனால் கைப் பேசியை வைத்து வேற தலைப்பில் உரையாற்றி இருக்கலாம். நகைச் சுவையாகவாவது இருந்திருக்கும். நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கும் போது, ஒரு நண்பன், நண்பனுக்கு அழைப்பு விடுத்து நலமா, சாப்பிட்டாயா எனக் கேட்பது நேர விரயம் என்று அவர் சொல்வதை ஏற்க வேண்டாம் என முடிவெடுத்தாலும் அது ஒரு அபத்தம் என்பதை சொல்லாமல் இருக்க இயலாது.

ஒரு இளைஞன் நான்கு மணி நேரம் அமர்ந்து கைப் பேசியில் விரயம் செய்கிறான் என்பது சரி. வேறு என்ன காரியங்களுக்கு செய்கிறான் , தோழிகளிடம் கடலையா ? பார்க்கத் தகாத சிறு சிறு ஒளிப் படங்கள் வைத்து இருக்கிறானா ? இல்லை அவன் விளையாட்டுக்கு அடிமையா என்பது ஆராய வேண்டும்.

கடிதப் போக்குவரத்து குறைந்து கைப்பேசி வந்ததும் இரண்டு நிமிடமோ, இரண்டு மணி நேரமோ தனது கருத்தை, தனது தனிமையை, தனது நிலைமையை நிவர்த்திக்க எண்ணி நண்பனிடம் பேசும் ஒருவன், காரியமாகத் தான் பேச வேண்டும் என்பது மறுக்கத் தக்கது.

இது அவரது முன்னது கட்டுரைகளுக்கு எதிரானது . ஏதாவது காரியமாகத்தான் பேச வேண்டும் என்றால் , வாழ்க்கை இயந்திரமயமானதாகத் தோன்றாதா? பின் வாழ்க்கையை ரசிப்பது எவ்வாறு.

நான் பார்த்த காட்சியை, பெண்ணின் அழகை , நான் ரசித்து உண்ட உணைவை , நான் வாங்கிய புது பொருளை, கேட்ட பாடலை ஆயிரம் கல் தொலைவில் இருக்கும் எனது நண்பனுடன் பகிர முடிய வில்லை எனில் பயன் என்ன ?.

எனக்கு " into the wild " என்ற ஒரு ஆங்கிலப் படம் தான் நினைவில் வருகிறது . பகிராத எதுவும் சந்தோசத்தை தராது.

இந்த கருத்துக்கள் தொடர்ந்தால், அந்த பக்கங்கள் நீயும் நானும் ஆகா இராது; "நானும் நானும்" ஆகிவிடும் .

Monday, July 19, 2010

மாலத்தீவு மாயமாகுமா ?



வெப்ப நிலை உயர்வு காரணமாக மாலத்தீவுகள் மூழ்கி விடும் என்று அவர்கள் நீருக்கடியில் கூட்டம் போட்டது அனைவரும் அறிந்ததே. வரவேற்கத்தக்கது. அது தொழிநுட்ப வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும் ஒன்றும் செய்யாமல் இருக்கும் மூளைக்கும், சுடோக்கு விளையாடும் மூளைக்கும் உள்ள வித்தியாசம் போல ஏதோ ஒன்று செய்து விட்டு போகிறார்கள். சிந்தனை வளரட்டும் .

ஆனால் உண்மையில் நீரின் மட்டம் உயரும் பொது மாலத்தீவுகள் மூழ்குமா என்பது கேள்வியாகிறது.
கோரல் பாளிப்புகள் என்ற உயிருள்ள தாவர இனம் தான் இம்மாதிரி சிறு சிறு தீவுக் கூட்டங்கள் உண்டாக காரணம்.

முதலில் தீவுக் கூட்டங்கள் எங்கெங்கு உருவாகிறது என நோக்கினால், எரிமலைக் குழம்பு மேல் வந்து காயும் போது, கோரல் பாளிப்புகள் எனும் இத்தவரக் கூட்டம் மண்டும் இடங்கள்.

இதில் மாலத்தீவுகள் இரண்டாவது வகை.

இவ்வகையான கோரல் பாளிப்புகள் சில எல்லைகள் உண்டு. அந்த எல்லைக்குள் தான் வளரும். உதாரணமாக 27 டிகிரி வெப்ப நிலை; அலைகள் குறைவான பகுதி போன்ற சில. இன்னொரு அழகு, கடல் மட்டம் உயரும் போது அதுவும் வளரும். உயரம் குறையும் போது அதுவும் குறையும். ஆகா நீர்மட்டத்திற்கு மேல் அதன் உயரம் மாறாதது.

திடீரென வரும் சுனாமி அலை, வேதிப் பொருள் கலப்படம் போன்ற காரணங்களாலேயே அழிகிறது. அதுதான் இந்த தீவுக் கூட்டங்களின் வளர் தளம் எனும் போது, வெப்ப நிலை உயர்வால் கடல் மட்டம் உயரும் போது அதுவும் வளர்ந்து மட்டம் உறுதி செய்யப் படவேண்டுமே.

ஏன் அவ்வாறு இல்லை ?



.

Monday, June 21, 2010

மழை எனும் மந்திரம்


மழைக் காலமோ, வெயில் காலமோ, குளிர் காலமோ , தமிழ் நாட்டை விட வட மாநிலங்களில்தான் அதிகம் உணர முடிகிறது என்பது மிக சரியான வார்த்தை. கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து மழைக் காலம் ஆரம்பம் .

நமது ஊரை பொறுத்த வரை மழைக்காலத்திலும் ஒரு நாள் மழை , இரண்டு நாள் மழை மாத்திரமே தொடர்ந்து இருக்கும்.

ஆனால் வட மாநிலத்தில் கொடூரமான 48 பாகை அளவு வெயில் அடித்த மறுநாள், மழைக்காலம் என்றதும் மேகக் கூட்டம் எங்கிருந்து பயணித்ததோ தெரியவில்லை. முழுவதும் மூடியது. 16 ஜூன் ல் மூடிய வானம் இன்றும் திறக்க வில்லை. அதாவது சூரியனைக் கண் விழிக்க விடவில்லை.

வெளி நாட்டில் தொடர்ந்து விடுப்பில்லாமல் வேலை பார்த்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த ஒருவன் மனைவியைக் கண்டதும் ஆவலுடன் வீட்டுக்குள்ளேயே கொஞ்சி விளையாடுவதைப் போல, கடுமையான வெப்பம் எனும் ஆற்றல் முழுவதும் வெளியேறியதும் சோர்ந்து வீடு திரும்பி இரண்டு மூன்று மாதம் விடுப்பில் வீட்டுக்குள்ளிருந்து வெளி வருவதில்லை சூரியன், வட மாநிலங்களில்.

நமது ஊரில் சூரியனுக்கு அரசு வேலை. நிறைய விடுமுறை. அதனால் ஒரு நாள் வெளியில் வருவான். மறு நாள் வீட்டுக்குள் இருப்பன். சுக வாழ்க்கை.

துவைத்த துணி காயாது, வெளியில் சென்றால் அனைத்தும் நனையும் என்பதெல்லாம் இருந்தாலும் , மழை என்ற உணர்வு மகிழ்ச்சியை மட்டுமே தருகிறது.

இன்று இங்கு கடுமையான மழை தொடர்ந்தது. மனதில் சிறு உந்துதல். சிறிது காலாற நடக்க எண்ணினேன் தனியாக நனைந்து கொண்டு.

சிறு வயதில் மழையில் நனைந்து வீட்டில் அம்மாவிடம் அடி வாங்கிய நாட்கள் ,
பள்ளி நாட்களில் மழையில் வேகமாக மிதிவண்டி மிதித்து நண்பனுடன் போட்டியிட்ட நாட்கள்
கல்லூரியில் மழையில் தோழியுடன் நடந்த நாட்கள்
பின், நண்பர்களுடன் இரவில் மழையில் நனைந்து பந்து விளையாடிய நாட்கள்

என அனைத்தையும் அசை போட்டு , இரவு உணவு முடிந்து நடக்கும் வயதான தம்பதியர் போல, நானும் என் மனமும் மழையை ரசித்து சிறிதும் பின் விளைவுகளை நினைக்காது ( கை பேசி நனைகிறது, பணம் நனைகிறது) முழுக் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளிலும் கை விட்டு வீர நடை போட்டு மழையில் நடந்து வந்து சேர்ந்தேன்.

மழையில் நனையும் போது உடலுடன் உள்ளமும் குளிர்ந்த திருப்தி.

அம்மாவின் தாலாட்டு, இளையராஜாவின் இசை, உண்மையான நட்புடைய நண்பனின் பேச்சு, நல்ல புத்தகம் , அனைத்தோடும் இதையும் இணைத்து பார்த்தேன்.

நிம்மதியான தூக்கம் வரும்.

இலக்கியம்

தலைவன் ஒருவன், தன் தலைவியின் பிரிவாற்றாமையால் பாடிய ஒரு குறுந்தொகை (ரூ 100 ) ; நெடுந்தொகை (ரூ. 1000 ) பாடல் ,

நீ
என்னைப் பிரிந்தாய் ;
காப்புக்கு போடும் ஜட்டி யானாலும் (கு.தொ)
காசுக்குப் போடும் குட்டி யானாலும் (நெ.தொ)
எதைத் தொட்டாலும்
பிரிய வில்லை உன் நினைப்பு ..

- புலவர் இராஜராஜன்

Friday, June 18, 2010

ஒரே ஒரு ஒப்பம்


ஒரு அரசு அலுவலகத்தில் கையொப்பம் வாங்க வேண்டிய வேலை. சரி, ஒரு நாளில் வாங்கி விடலாம் என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கொண்டு காலையில் அவசர அவசரமாக கிளம்பி, அவசரத்தில் காலையில் எப்பொழும் சுவைக்கும் காபி , செய்தித் தாள் மறந்து, கூட்டம் சகிக்காத 23c பேருந்தில் ஏறி, சில்லறை இல்லாமல் அசிங்கமாக சென்னைத் தமிழில் நடத்துனரின் திட்டும் வாங்கி, மற்றவர்கள் மத்தியில் அசிங்கத்தைக் காட்டாது இருக்க, வழிய ஒரு சிரிப்பை வரவழைத்து வியர்வை நாற்றத்துடன் இறங்கும் பொழுது காலை 9 .30 .


அப்பாடா 10 மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தோம் என மகிழ்ச்சியில் அந்த அலுவலகத்தில் நுழைந்தேன். அந்த பியூன் என்னை ஏற்றம் இறக்கமாக பார்த்தான். புரியவில்லை.

10 மணி ஆனதும் எல்லோரும் உள்ளே வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டதே என சிறு வேகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது என எண்ணி சற்று வெளியே இருக்கலாம் என நேரங்கடத்த , வெளியில் வந்தேன்.

திடீரென காலையில் காய்கறி வாங்கி கொடுக்க மறந்தது ஞாபகம் வர, அம்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசி விட்டு , அப்படியே ஆபீசிலும் என்ன நிலவரம் என தெரிந்து கொண்டு ஒரு தேனீர் கடையில் நேரம் கடத்தி கொண்டு இருந்தேன்.

மணி இப்போது 10 . 15 , இன்னும் 10 நிமிடம் போகட்டும் என எண்ணி தினத் தந்தியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பை ரசித்தேன். ( என்ன மனிதன் நான் ?) .
10.25 . இப்போது எல்லோரும் அமைதி ஆகி இருப்பார்கள் என்று எண்ணி உள்ளே சென்ற எனக்கு முதல் திகைப்பு எதிர்பார்த்த அமைதி இருந்தது. ஆனால், யாருமில்லாத அமைதி. என்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன் இன்று ஞாயிறோ என்று. இல்லை.

பியூனை கேட்டேன் . " அய்யே, மணி இன்னா இப்போ பத்தரைதானே , வருவாய்ங்க. போயி அங்க குந்து " என்ற பதில். திகைப்புடன் அமர்ந்தேன்.

10 . 45 .. ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தார்கள். யாருக்குமே பதற்றம் என்பது சிறிதும் இல்லை. நான் பார்க்க வேண்டிய ஆளும் வந்தார். உடனே செல்லாமல் 5 நிமிடம் கடந்து செல்ல நினைத்து எல்லோரையும் நோட்டம் விட்டேன். யாரிடமும் பதற்றம் இல்லை. எல்லோர் கையிலும் செய்திதாள்களும், வார புத்தகங்களும். பெண்களிடத்தில் வார மலர் , குடும்ப மலர். தவிர மறந்தும் யாரிடமும் கோப்போ, பேனாவோ இல்லை. பின்னர் ஒரு வேலை முடிய வருடக் கணக்கு ஏன் ஆகாது என என்னை கேட்டுக் கொண்டே, அவரிடம் சென்றேன்.

அப்போது வெளியில் இருந்த பியூன் சொன்னான்.
"மணி 11 . தேனீர் இடைவேளை"... வந்து 5 நிமிடத்தில் இடைவேளை. எப்போ முடியும் எனக் கேட்டேன். அவன் சொன்னான் " அரை மணி நேரம் என்று".. கடியாக 11 .30 க்கு உள்ளே சென்றேன். அடுத்த 5 நிமிடத்தில் அவர் வந்தார். அவரிடம் சென்ற போது ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் வேலை இருக்கிறது என்று சொன்னார் . எதிர் பார்த்த பதில் தானே. சென்று அமர்ந்தேன். 15 நிமிடத்தில் உள்ளே சென்ற போது , வாங்கி பார்த்து கொண்டே என்னங்க இது இப்படி வந்து வேலையில தொந்தரவு பண்றீங்களே என்று நொந்து கொண்டார் ... உண்மைதான்

அப்புறம் தான் நடந்தது காமெடி. கேட்டாரே பார்க்கலாம் , ஏங்க, உங்க பாட்டனார் இறந்ததா சொல்றீங்களே எப்போ இறந்தார் ?... நானும் சொன்னேன் ஒரு 25 வருடம் இருக்கும். அப்போ அவரோட இறப்பு சான்றிதழ் எடுத்துட்டு வாங்கன்னார்.அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

இன்னுமொரு சான்றிதழில் ஏன் பெயரில் பின்னால் அப்பாவின் முதல் எழுத்துக்கு பதில் முன்னாடி இருந்தது. இது இரண்டும் நீங்கள்தான் என எழுதி வாங்கி வர சொன்னார் .
சரி, மற்ற சான்றிதழ்களையும் காட்டி அவரிடம் ஏதும் குறை இருந்தால் சொல்ல சொன்னேன். அவர் " இல்லைங்க, இப்போ லஞ்ச் டைம் ஆச்சு " நீங்க சாயந்தரமா வாங்க.

மதியம் 4 மணி வாய் அவர் லஞ்ச் முடிஞ்சு வர வில்லை. யாருமே வர வில்லை. பியூன் சொன்னான் " நீங்க நிக்கிறது வேஸ்ட் ங்க. வருவாங்க ௧௦ நிமிடத்துல "டி" ன்னு போவாங்க. 5 மணி க்கு வருவாங்க , வீட்டுக்கு கிளம்ப பாப்பாங்க."

திட்டிகிட்டே வெளியே வந்தேன்

இதுதான் நடந்ததுன்னு ஏன் நண்பன்கிட்ட சொன்னா அவன் சொல்றான் " அதுக்குதான்டா கால் காசானாலும் கவர்மென்ட் காசு திங்கனும்கிறது ன்னு " . அப்போ அவனுக்கும் அங்க போயி வேலை செய்யலாம்ன்னு எண்ணம் இல்லை.

அப்புறம் யாரை குறை சொல்வது சொல்லுங்க .

கவலை

சிறு வயதில் சிறு கல்லையோ , ஒரு காசையோ எடுத்து கொண்டு ஓடி , ரெயில் தண்டவாளத்தில் வைத்து ரெயில் ஓடியதும் ஓடி சென்று அந்த மெலிந்த காசைக் கொண்டு விளையாடுவது வழக்கம்.

தற்போது நான் அவ்வாறு செய்ய முயலுவேனானால் என்னைக் கைது செய்தார்களா என்றே என் வீட்டுக்குத் தெரியாது . அந்த அளவுக்கு நிலை தலைகீழ்.


இதிலும் கொடுமை என்னவென்றால் நாம் சுதந்திரம் சுவைத்து இப்பொழுது 60 ஆண்டுகள் தான் ஆகிறது. இப்போதே நம்மை மீறும் செயல்கள் தொடங்கியது என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகள் பக்கத்து வீட்டுக் காரனை நம்ப இயலும் என்றே தெரிய வில்லை. பக்கத்து காரர்களோடு ஒட்டி உறவாடிய நமது கிராமங்களிலும் இதே நிலைதான்.

அன்பு, நம்பிக்கை என்ற சொல்லை தமிழ் அகராதியில் தான் பார்க்க இயலும் என்பது துக்கத்துக்குரியது. எந்த செயலிலும் கவலை என்றால் மனிதனின் நிலை ?


ரெயில் பயணம் என்றால் வெடிகுண்டு கவலை !
லாட்ஜில் தங்கலாம் என்றால் கேமரா கவலை !
சுற்றுலாத் தளங்களில் எங்கு எப்பொழுது வெடிக்குமோ எனக் கவலை !
பக்கத்து சீட்டுக் காரன் எப்போது நம்மை கவிழ்ப்பான் என்று அலுவலகத்தில் கவலை !
எந்த மினனஞ்சலில் வைரஸ் வருமோ என அதை திறக்க கவலை !
தியேட்டர் சென்றால் இடிந்து விழுமோ எனக் கவலை !
தூங்கும் பொழுது காலை எழுவோமா எனக் கவலை !



எதுக்கெடுத்தாலும் கவலை , எதை எடுத்தாலும் கவலை !!

Wednesday, June 9, 2010

இளைஞர்களே வாருங்கள் !!!

அதுவும் ஒரு கட்சி என்று அதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று செய்தித் தாளில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம் . பா.ம.க விற்கு முடிவு எடுப்பதில் குழப்பமாம் . எதற்கு என்கிறீர்களா ? தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போமா வேண்டாமா என்றுதான்.

சில நாட்களுக்கு முன்னால் இதே பா.ம.க , தங்களின் முதல் எதிரி தி.மு.க என்றது. இது என்ன தமிழ்நாட்டு அரசியலில் புதுசா என்கிறீர்கள். ஆம். புதுசில்லைதான். ஆனால் இவ்வாறாக பேரம் பேசி கூட்டணி வைத்து, மாறி மாறி பேசி, இவர்கள் அரசியல் நடத்தும் கொடுமையை இப்படி அப்பட்டமாக செய்யும் அளவுக்கு அனைவரையும் முட்டாள் என நினத்திருக்கின்றனர்.

நாம் இருக்கட்டும், நம்மில் பலர் பா.ம.க விற்கு ஒட்டு போடப் போவதில்லை. அந்த வன்னியர் இனம் இன்னும் விழிக்க வில்லையா. இந்த பேரம் நடப்பது அந்த இனத்தின் உரிமைக்கா ? அந்த இனத்திற்கு வேண்டிய சலுகை வேண்டியா ? இட ஓதிக்கீடா ? இல்லையே !!

திருமிகு பாசமானவருக்கு எம்.பி பதவியும் , மந்திரி பதவியும் கிடைக்காதாம். அதனால், முடிவு எடுப்பதில் குழப்பம். இந்த தி.மு.கழகமும் அவர்கள் 2011 ல் கூட்டணியில் இருப்பதை வைத்து இடம் எனத் தெளிவாக பேரம் பேசுகிறது.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் , இந்த இடத்தில் குழப்பம் எனில் பா.ம.க உறுதி செய்ய வில்லை 2011 ல் யாருடன் கூட்டணி என்று. அப்படியானால் கூட்டணி மக்களுக்காகவோ, சாதி நலனுக்காகவோ, நாட்டு நலனுக்கோ, இல்லை, சேருமிடத்தின் கொள்கை பிடித்தோ இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது.

கொள்கை என்பது பேச்சளவில் தான் போலுள்ளது.
ஒரு சிறு கதை :

இரண்டு சிறு கிராமம், இரண்டும் வறண்ட பகுதி என்பதால் மற்ற பகுதிகளை கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் தொழில். எல்லாப் பகுதிகளையும் கொள்ளை அடித்த பின்னர் அந்த இரண்டும்தான் மிச்சம். இரண்டுக்கும் தெரிந்தது இரண்டு மட்டும்தான் மிச்சமென்று. ஒடுங்கியத் தலைவன் ஒன்கியத் தலைவனிடம் சொன்னானாம். எனது ஊரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எனது வீட்டை விட்டு விடு. எனது மகனுக்கு திரும்பவும் தலைவன் பதவியைக் கொடு . அவன் மற்றதைப் பார்த்துக் கொள்வான் என்று. கிராமம் கொள்ளையடிக்கப் பட்டது. அந்த கிராம மக்கள் அனைத்தையும் இழந்தனர். மகன் தலைவனானான் . உச்ச ஸ்தானியில் ஒலித்தது " வாழ்க " எனும் அந்த மக்களின் கூச்சல்.

சீமான் சொன்னது போல் , படித்தவன் வரும் வரை பொறம்போக்குகள் தான் நிரப்புவார்கள்.

Tuesday, June 8, 2010

தி பக்கெட் லிஸ்ட் (2006)

2006 ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம் .





ஜாக் நிகல்சன் மற்றும் மோர்கன் ப்ரீமன் நடித்த படம் . இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் வாழ்க்கையில் எதையோ இழந்த மாதிரியும் , வாழ்கை என்பது எது என்பது புரிந்தும் புரியாத மாதிரி ஒரு உணர்வு. இயக்குனர் ரோப் ரேயநேர் க்கு வெற்றி .

மிக சிறந்த படங்களில் ஓன்று என்றே தோன்றுகிறது . விஜய், அஜித், சிம்பு, தனுஷ் படங்களில் வசனம் சிறிது அதிகமானாலும் அலறி ஓடும் நமக்கு படம் முழுக்க வசனம் இருந்தாலும் ரசிக்க இயலும் என உணர்த்தும் நேர்த்தியான திரைக்கதை ; ரசிக்கத் தகுந்த காட்சியமைப்பு ; இயல்பான நகைசுவை வசனங்கள் என உயர்தரமான சிந்தனைகளின் ஒட்டுமொத்த படைப்பு இந்த படம்.

"nobody is perfect " என வசனம் பேசும் இரண்டு ஜாம்பவான்களின் நடிப்பில் ஒரு perfection குன்றின் மேலிட்ட விளக்காய் தெரிகிறது . காட்சி அமைப்புகளில் திறம்பட செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

முடிந்த வரை இந்தியா முதல் கொண்டு எல்லா ஊர்களையும் சுற்றி காட்டுகிறார்கள்.

கதை என்று சொன்னால் தலைப்புக்கேற்ற மாதிரி ஒரு பக்கெட் லிஸ்ட் அதாவது இறக்கப் போகும் ஒருவர் இறுதி ஆசைகளை எழுதி செய்ய நினைக்கும் ஒரு பட்டியல் . அதை செய்து முடிக்க நினைக்கும் இரு முதிர்ந்த புற்றுநோயாளிகளின் கதை.

நிகல்சொனின் ஆசைகளில் ஒன்றான அழகிய பெண்ணை முத்தமிடுதல் எனும் முதல் ஆசை இறுதியில் நிறைவேறுவது நெஞ்சைத் தொடும் எளிய காட்சி.

இவ்வாறாக அனைத்து விதங்களிலும் பார்க்கத் தகுதியான படம். இதைத் தங்களின் bucket list ல் ஒன்றாக வைக்காமல், விரைவில் பார்க்க.

Friday, June 4, 2010

நானும் அறிக்கை விடுறேன்

மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலர், ஜெயக்குமார் அவர்கள் அறிக்கையில் கூறிய விஷயம் " போலீஸ்காரர்களின் ஓட்டு தி.மு.க விற்கு இல்லை".

இவர் உரையை தயாரித்து சரி செய்துதான் பேசுகிறாரா. இல்லை வாயில் வருவதுதான் இவரது உரையா என எனக்கு ஐயம்.

இதை தெரிவிக்கும் போது , மற்றவர்கள் அவர்களுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்கிறாரா.
தனது அ.தி.மு.க விற்கு எப்படி ஓட்டு கேட்பது என்பதை விட்டு அவர்களுக்கு யாரெல்லாம் போட மாட்டார்கள் எனக் கூறுவது தி.மு.க வின் பலத்தை அல்லவா கூறுவதாய் உள்ளது. இன்னொன்று , இதை தி.மு.கழகத்துக்கு அறிவித்து அவர்கள் போலீஸ்காரர்களை கவனிக்க வழி செய்யும் எச்சரிக்கையாய் உள்ளதாய் தோன்றவில்லையா.

வடிவேலு ஸ்டைலில் " நானும் அறிக்கை விடுறேன், நானும் அறிக்கை விடுறேன் " விடுறார் போல.

இவர்கள் எல்லாம் இப்படி அறிக்கை விடுவதால்தான் 87 வயதிலும் கட்சியை வளர்க்க நான் இன்னும் இளைஞன் என்கிறார் கருணாநிதி.

திருமிகு கருணாநிதி அவர்களுக்கு,

முட்டாள்களின் மத்தியில் சாணக்கியன் என்று உங்களை சொல்ல மாட்டேன்.
ஆனால் , முட்டாள்களை முட்டாள்களாகவே வைத்திருக்கும் சாணக்கியம் உங்களுக்கு உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அது இருக்கட்டும், ; இன்றும் நான் கட்சியை வளர்க்கும் பொருட்டு இளைஞன் என சொல்லும் போது ஸ்டாலின் தங்களை முறைத்ததாய் எனக்குத் தோன்றுகிறதே.

Wednesday, June 2, 2010

போம் யெஒரெஉம் கஐல் க்யெஔல் குறிகோ போம்

ஸ்ப்ரிங், சம்மர், பால், விண்டேர் அண்ட் ஸ்ப்ரிங்

என ஆங்கிலத்தில் அதன் தலைப்பை மொழி பெயர்க்கலாம்.

கொரியன் திரைப்படம். என்னை மிகவும் பாதித்த என்றே தொடங்க வேண்டும்.

கி-டுக்-கிம் என்பவர் எழுத்தும் இயக்கமும் நடிப்பும். ஆனால் நடிக்க வில்லை, இயக்க வில்லை, எழுதியும் இருக்க வில்லை. செதுக்கி இருக்கிறார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

திரைப்படத்தின் துவக்கம், ஒரு பள்ளத்தாக்கின் நீர்நிலைக்கு நடுவே உள்ள ஒரு அழகான குடிசையின் முகத்தே. அந்த காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை கேமரா அப்பப்பா அருமை, அழகு, அற்புதம், இன்னும் என்னன்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும். நான்கு காலத்தையும் காட்டும் இந்த அற்புதம் அவருக்கு உதித்தது நமது கண்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

புத்த கொள்கைகளில் பிறலாத ஒரு புத்த துறவியின் கதை.

புத்த கொள்கைகளில் ஊறிய இயக்குனர் என்பதை கதைப் பாத்திரங்களுக்கு பெயர் வைக்காதது முதல் தெரியப் படுத்துகிறார். படத்தில் வரும் இரு காவல் காரர்களைத் தவிர யாருக்கும் பெயர் இல்லை.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி படம் வசந்த காலத்தில் ஆரம்பம். கல்லால் செய்யப பட்ட புத்தர் சிலை. புதுப் பெய்ன்ட் அடித்து நமக்கு சாமி படம் காட்ட வில்லை.

சாங் ஹோ ஹிம் என்ற அந்த சிறுவனைப் பல படங்களில் பார்த்து இருக்கலாம். நடிப்பில் அற்புதம். சிறுவனுக்கே உள்ள சேட்டைகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறான். பாம்பு, தவளை, மீன்களில் கல்லைக் கட்டும் போது சிரிப்பதும், அதை முதியவர் உணர்த்த , வந்து இறந்து கிடப்பதை பார்க்கும் போது அழுவதும் அழகு.

பிறகு ஒரு கோடைக் காலத்தில் அவன் இளைஞனாக காட்டப் படுகிறான். பெண் வாடையே இல்லாதிருந்தாலும் வயதில் காம உணர்வு இயற்கையானது என்பதை பாம்புகளின் புணர்ச்சியை பார்க்கும் போது அவனுள் மாற்றத்தை காட்டி அசத்துகிறார். அந்தக் கோடையில் ஒரு இளம்பெண் உடல்நிலை சரிப் படுத்த வேண்டி அங்கு அம்மாவுடன் வருகிறாள். அம்மா அவளை துறவியிடம் ஒப்புவித்து கிளம்புகிறார். இளைஞன் மற்றும் அந்த இளம்பெண் இடையேயான தனிமை உடலுறவு கொள்ள செய்கிறது . அதை அறிந்த அந்த துறவி உணர்ச்சிவசப் படாமல் இது இயற்கை, இதுதான் மருந்து எனும் பொழுது உலகின் மிகப் பெரிய உண்மையை யதார்த்தமாக சொல்லி விடுகிறார் இயக்குனர்.
அவளைப் பிரித்து அழைத்து செல்லும்பொழுது இளைஞன் கோபம் கொண்டு அவளுடைய ஊருக்கு செல்கிறான்.

அவன் செல்கிறான் ஆனால் கேமரா நகரவில்லை.

அந்த துறவியிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. அவரது வழக்கம் தொடர்கிறது.

திரும்ப கால மாற்றம். ஒரு மழைக்காலம்.
துறவிக்குத் துண்டு பிரசுரத்தின் மூலம் தெரிய வருகிறது அந்த இளைஞன் (இயக்குனர்) அவன் மனைவியைக் கொலை செய்து விடுகிறான் என்று. அங்கும் அமைதி. அவன் மீண்டும் இந்த இடம் தேடி வருகிறான், அதே கோபத்தோடு. கோபம் அவனைத் தற்கொலை முயற்சிக்கு தூண்ட அப்போது துறவி அவனுக்கு பொறுமையை புரிய வைக்கிறார். காவல் காரர்கள் அவனைக் கைது செய்து அழைத்து செல்ல வருகிறார்கள். அந்த இளைஞன் திரும்பி பார்க்கும் வரை அந்த படகு முன்னேற மறுக்கிறது .
புத்த பிட்சுகளின் வழக்கப் படி அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்கிறார்.
அந்த முதிர் துறவியின் (இயங் சு ஒத் ) நடிப்பும், அவரது பாத்திரப் படைப்பும் படம் பார்த்த ஒரு எண்ணத்தை விரட்டுகிறது; புத்த பிட்சுவாகவே வாழ்கிறார்.

கால மாற்றம் . ஒரு பனிக் காலம் :
அவன் மீண்டு வருகிறான். அவனிடம் அமைதி. அவன் துறவி ஆகிறான். சிறிது நாட்களில் அவனிடம் ஒரு பெண்மணி வந்து ஒரு குழந்தையை ஒப்படைத்து செல்லும் பொழுது இறக்கிறாள். அந்த குழந்தை இவனுடையது. இயக்குனர் கிம் டுக் கிம் நடிப்பிலும் அசத்தல் .

கால மாற்றம் , ஒரு வசந்த காலம் :
மீண்டும் அந்த சிறுவன், மீன்களுடன், தவளையுடன், பாம்புகளுடன் விளையாட்டு.
சுபம்.

இந்த தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நோக்கும் போது மனிதனின் இயல்புகளையும், காலத்தையும் மிக அழகாக ஒப்புமை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
  • வசந்த காலம் : இளம் பருவம், கவலை தெரியாத பருவம்,
  • கோடைக் காலம் : மனித உணர்ச்சிகளின் அப்பட்டமான வெளிப் பாடு
  • மழைக் காலம் : மனத்தின் முதிர்வு
  • பனிக் காலம் : பொறுமை , எனக்குத் தெரிந்த வரை இது . இன்னும் இருந்தால்பின்னூடங்களில் தெரிவியுங்களேன்

கண்டிப்பாக அற்புதமான , எளிமையான, அழகான, நேர்த்தியான, நம்மை தொடுகின்ற படைப்பு

Saturday, May 29, 2010

All is well

நண்பனே,
மேகக் கூட்டத்துக்கு நடுவில் இருக்கிறாய்
நிரம்ப மகிழ்ச்சி வேண்டாம்
உன்னை அது கடந்து போகும்
மிகுந்த கவலையும் வேண்டாம்
கவலையும் விரைவில் கடக்கும் ;

பலூன் ஒன்று வானிலேயே மிதக்க
மேல்நோக்கி ஊதும் குழந்தை போல
உனது வாழ்நாளும் நாட்களாய் நீடிக்க
என்றும் நீ சிரிக்க !!

நல்லது ஒன்றுமில்லை
கெட்டது என்றுமில்லை
உண்மையே பேசு - பிறருக்கு
உதவியே வாழ்

பிழை என்பது இல்லவே இல்லை
உன் அகராதியில் - ஏனெனில்
நீ ஒரு ஆள்
all is well


- பெருங்கவிஞர்

Friday, May 28, 2010

பொது நலப் பிரச்சினை

இந்த ஆந்திராவில் மட்டும் எதாவது பிரச்சனைன்னு சொன்னால் எதுக்காக அது என்று பல முறை யோசிக்க வேண்டியுள்ளது. 25 மே அன்று எனது சொந்த வேலையின் பொருட்டு சென்னை செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் கிளம்பும் வேளையில் நடந்த நிகழ்வு :-
இரண்டே நாளில் 1200 km பயணம்,
பயணம் ரயிலில், 27 மே அன்று இரவு 11 .25 க்கு சென்னையில் துவங்க வேண்டிய பயணம் 30 நிமிடம் தாமதம். அது வழக்கம் தானே என்று ஒன்றும் சொல்ல இயலாமல் ஏறி அமர்ந்தேன் .
அடுத்த நாள் காலையில் ஆந்திராவில் வாரங்கல் ஐத் தொடும் தூரத்தில் உள்ள ஊர் மகாபுபாபாத். அந்த ஊரில் திடீரென ரெயில் நின்றது. ஒரு மணி நேரம் , இரண்டானது , மூன்றானது எடுக்க வில்லை. இறங்கி எட்டிப் பார்த்தால் தொடர் வண்டியின் கடைசிப் பெட்டியை, அங்கிருக்கும் சில மாக்கள், (மன்னிக்கவும் எழுத்துப் பிழை). மக்கள் சிலர் கல்லால் அடித்தப் படியும், துப்பாக்கியால் சுட்டப் படியும் இருந்தனர்.
என்ன எது என்று ஒன்றும் புரிய வில்லை .
வண்டியின் உள்ளே விவாதம் தொடங்கியது. பிரச்சினை என்னவாக இருக்கும்.
$ நக்சலைட் தொல்லையாக இருக்குமோ என ஒரு சாரார்.

$ அரசியல் பிரச்சினையாக இருக்கும் என ஒரு சாரார்.
$ தெலுங்கானா பிரச்சினையாக இருக்கலாம் என ஒரு சாரார்
$ முன்னணி ஹீரோவின் படம் நன்றாக ஓட வில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம் என ஒரு சாரார்.
$ பொழுது போகாமல் இருக்கலாம் என ஒரு சாரார்.
இறுதியில் எனக்கு மாலை தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததும்தான் தெரிய வந்தது அது ஒய் எஸ் ஆர் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்று.

என்னுடம் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரம் ,
*ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்த குடும்பம். ( 9 மணிக்கு திருமணம், இங்கு மணி 12 .30 மதியம். )
*வயதான முதியவர் ஊருக்கு போக வேண்டி.
*ஒருவர் வேலைத் தொடர்பான நேர்முகத் தேர்வுக்கு போக எண்ணி .

இன்னொரு 25 வயது இளைஞனுக்கு மட்டும் சந்தோசம். ஏனென்றால் அந்த அறையில் உள்ள 16 அல்லது 17 வயது உள்ள ஒரு பெண்ணுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தான்.

moral of this post :
அந்த இளைஞன் கெட்டிக் காரன்

Friday, May 21, 2010

தனிமை

பி யு சின்னப்பா காலத்தில் ஒரு மாடம், மாடத்தின் ஊடே செடி கொடிகள். அதன் வழியே பார்த்தால் நிலா.
சிவாஜி கணேசன் காலத்தில் வெளியுலகம்; கடற்கரை மணல், கடல் அலை, தூரத்தில் தெரியும் கப்பல்.
ரஜினி காலத்தில் குளிர் அரை , படுக்கை, அந்த அறையின் ஓவியங்கள், படுக்கை விளக்கின் பக்கத்தில் ஒரு தனித்த பெண்ணின் பொம்மை.
தற்போது நமது காலத்தில் என் தனிமையை உணர்த்த எனது கைப்பேசி ; .

நான் சென்னை வாசியாக இருந்த வரையில் தினமும் 10 சிறு செய்திகளை எனது கைப்பேசியிலிருந்து நீக்கினால் மட்டுமே அடுத்த செய்திகள் வரும். அந்த அளவுக்கு தொடர் செய்திகள் என்னைத் தொடர்ந்து வந்தன. ஆனால் நான் சென்னையை விட்டு நீங்கியதும் 7 மாதங்களாக தன்னுடைய வாடிக்கையாளன் என எனக்கு நினைவுப் படுத்த வேண்டி வரும் ரிலையன்ஸ் செய்திகளை தவிர எனக்கு எந்த செய்திகளும் நண்பர் கூட்டங்களிடமிருந்து வருவதில்லை. எனவே எனது கைப்பேசி இப்போது அனாதையாக எந்த செய்திகளும் இல்லாமல் எனக்குத் தனிமையைத் தெரிவிக்கிறது.
காரணம் இலவச வசதி இல்லை என்றாலும் வரவில்லை என்பதே உண்மை.... மற்றுமொரு உண்மை :- தொலைதூர அழைப்பு என்பதால் எனக்கு அழைப்புகளும் வருவதில்லை.
என்னே தனிமையின் கொடுமை.

Monday, May 17, 2010

சோவுக்கு கடிதம்

அன்புடைய திருமிகு சோ அவர்களுக்கு,

பண்புடன் எழுதும் கடிதம். நலம். தங்கள் நலமறிய அவா. நான் தங்களின் பரம ரசிகனாக இருந்தேன் என்றே சொல்லலாம். தங்களது இயல்பான நகைச்சுவை, பேச்சு நடையில் மகிழ்பவன். பல முறை என் நண்பர்களிடம் தங்களைப் பற்றி வாதாடி இருக்கிறேன்.
நிற்க
இந்த வாரம் தங்களின் "துக்ளக்" வாங்கிப் படித்தேன், ஒரு எதிர் பார்ப்போடு. (19 .05 .2010 அன்றுக்கானது. மேலும் ரூபாய் 8 .) படிக்க ஆரம்பித்ததும் தங்களின் மீது மதிப்பு கொண்டமைப் பற்றி என்னையே நான் ஒரு முறை கேட்டுக் கொண்டேன். முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை உங்களின் மரக்கிளைகளில் உள்ள இலைகளிலிருந்து காற்று அடித்ததே தவிர பத்திரிக்கையாளனுக்கான அழகு தெரியவே இல்லை. வருந்துகிறேன்.

முதல் பக்கத்தில் அம்மாவின் படம், அடுத்து அம்மாவின் அறிக்கைகள், அடுத்து அம்மா எதுவும் செய்ய வில்லை என்பதால் அந்த இடம் காலியாக விடாது, தாங்களாகவே ஆளுங்கட்சியை ஏசத் தொடங்கி விட்டீர்கள் போல. செந்தமிழ் மாநாட்டுக்கும், நிலக்கரித் தன்மை குறைப் பாட்டுக்கும் ஆளுங்கட்சியைக் குறை சொல்லி ஆகிவிட்டது. பின்னர் அபத்தத்தின் உச்சம் ஒரு பேட்டி வடிவில். அடுத்த இதழில் அக்னி வெயில் தாங்க வில்லை, மழை இல்லை. பேருந்தில் உள்ளே காற்று வர வில்லை. இறுதியாக எனக்கு கக்கா வர வில்லை. இது எல்லாவற்றிக்கும் காரணம் இவரின் ஆட்சிதான் என்பது கண்டிப்பாக இருக்கும். (எதிர் பார்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இனி அந்த பக்கமே போக விரும்ப வில்லை)

நான் ஆளுங் கட்சிக்கு சாதகமானவன் இல்லை. விமர்சிக்க வேண்டாம் என்றும் சொல்ல வில்லை. தங்களது விமர்சனத்தில் ஒரு தரம் இல்லை. புத்தகத்தை கீழே கொண்டு சென்று துடைக்கத் தூண்டுகிறது. கேள்வி பதில்களிலும் அபத்தமே மிஞ்சுகிறது.

எனது ஆதங்கம் என்னவென்றால் இத்தனை வருடம் பத்திரிக்கை நடத்தும் தங்களுக்கு இன்னும் தர்மம் தெரிய வில்லையா. இல்லை உங்களவா களுக்கே உள்ளதா இது.

இதுவரை ஆயிரக் கணக்கில் செலவு செய்திருந்தாலும் இந்த 8 ரூபாயை செலவு செய்தது எனக்கு மிகுந்த வெட்கத்தைத் தருகிறது. பிச்சைக்கரர்களிடம் கொடுத்திருக்கலாம். உண்டு புகழ் பாடி இருப்பார்கள்.

உங்களது பத்திரிக்கையை வெளி உலகத்துக்கு விடாது உங்களவா க்குள் படிக்க வேண்டுகிறேன். மேலும் எனது உறுதிமொழி இதோ : இனி எக்காரணம் கொண்டும் தங்களது துக்ளக் வாங்குவதில்லை .படிப்பதில்லை.

இதற்க்கு பின்னூட்டங்கள் இருக்கலாம் " உன்ன யாருடா அவர மதிக்க சொன்னதுன்னு " . தவறு செய்ததை ஏற்கிறேன்.

Saturday, May 15, 2010

கறுப்பு பணம், வெளுப்பாகிறது

ஒருவருக்கு தன்னிடமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை வெளுப்பாக்க வேண்டுமென்றால்,
அவர் இப்படித்தான் செய்கிறாராம்.

முதல் படி, தன்னுடைய மச்சானை அழைப்பார்.
இரண்டாவது, அவரை நகைக் கடை ஒன்றுக்கு அனுப்புவார்.
மூன்றாவது, மச்சானும் அங்கு சென்று 10 தங்கக் கட்டிகளை வாங்குவார். ஒன்றின் விலை 10 இலட்சமாக இருக்கும். அதற்குப் பதிலாக இவர் ஒரு கோடிக்கான காசோலை ஐ கொடுத்து செல்வார்.
நான்காவது, மச்சான் தற்போது அந்த தங்கக் கட்டிகளை அன்பளிப்பாக அனுப்பியவருக்குத் தருவார்.
ஐந்தாவது, அந்த மகான் அதைப் பெற்று கொண்டு நேராக அதே கடைக் காரரிடம் சென்று அதை ஒரு கோடிக்கு விற்று வெற்றியுடன் திரும்புவார்.
இப்போது அவரது ஒரு கோடி உழைத்து வந்த பணம் அல்லவா!!!

ஆனால் ,,,,,,

இது மே மாதம் வரை செல்லு படியாகிறது. ஜூன் முதல் அரசாங்கம் அதுக்கும் செக் வைக்கிறது.
இன்னொருவரிடமிருந்து பெறப்படும் தங்கக் கட்டிகளுக்கும் இனி வருமான வரி கட்டப் பட வேண்டும்.

நான் எதிர்ப்பார்க்கிறேன் , அதையும் சமாளிக்கும் திட்டங்கள் இருக்கும் அவர்களிடம்.

அட, இப்பப் பாருங்களேன்,எனது சட்டைப் பையில் உள்ள கிழிந்து போன 5 ரூபாயை எப்படி மாத்துறதுன்னு தெரியலங்க எனக்கு.

Wednesday, May 12, 2010

" 17 again "


சமீபத்தில் " 17 again " ஆங்கில திரைப் படம் பார்த்தேன் .


2009 ல் வெளியான படம்.

நல்ல கற்பனை, கதை சுருக்கமாக :
கதையின் ஆரம்பத்தில், ஹிரோ உயர் கல்வி யில் பயிலும் ஒரு கூடை பந்து விளையாட்டு வீரன் . அவனுக்கு கூடைப் பந்தின் மீதும் காதல், கூடப் படிக்கும் பெண்ணின் மீதும் காதல். ஒரு சமயம், கூடைப் பந்து பந்தயம் நடந்து கொண்டு இருக்கிறது. அவன் காதலியும் அங்கு வருகிறாள். இடையில் அவள் அழுது கொண்டே வெளியேற நேர, அவனுக்குக் கூடைப் பந்தா, காதலியா எனும் சூழ்நிலை எழும்ப காதலியை நோக்கி விரைகிறான்.

20 வருடாங்களுக்குப் பிறகு அவன் மண வாழ்க்கை அவனுக்குக் கசக்கிறது. அவனின் மனைவியும் விவாகரத்து கேட்க, அவன் வெறுப்பின் உச்சத்துப் போகிறான். ஒரு வேளை கூடைப் பந்தை வாழ்க்கையாக தேர்ந்த்தெடுத்து இருந்தால் வாழ்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறான் .

அப்போது அவனின் மகன் , மகளின் உயர் கல்வியில் படிக்க, அவனுக்குப் பழைய நினைவுகள் வந்து பள்ளியில் சென்று பழைய புகைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனின் பழைய தொடர்பாக ஒருவரைக் காண்பிக்கிறார்கள். அவர் இவன் எண்ணங்களை புரிந்து கொண்டு , (நமது நடையில் சொல்லப் போனால் , அவனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி ), அவனை மீண்டும் இளைஞனாக மாற்றுகிறார். தொடர்கிறது கதை.

இப்பொழுது அவனுக்கு அவனுடைய 17 வயது மீண்டும் வருகிறது. நண்பனின் உதவியால் பள்ளியில் சேர்கிறான் . அங்கு அவனுடைய மகன், மகள் படிக்கிறார்கள். அங்கு அவனின் அனுபவங்கள் படமாக்கப் பட்டுள்ளது.
மீண்டும் கூடைப் பந்து விளையாடுகிறான். இடையில் அவனுடைய மனைவி அங்கு வர இவனைப் புரிந்து கொண்டு வெளியேற முயல மீண்டும் அதே சூழ்நிலை, மனைவியா, கூடைப் பந்தா; காதலுக்கு வெற்றி. மீண்டும் ஓடுகிறான் மனைவியைத் தேடி.

இதை நாம் இரண்டு விதமாக விமர்சிக்கலாம்.
  • காதலின் வழியில் , காதல் அழிவதில்லை.
  • எனது வழியில், காதல் வாழவும் விடுவதில்லை. சாகவும் விடுவதில்லை.
இதில் பல இடங்களில் டைரக்டர் ஐ எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அவற்றில் சில,
  • ஹீரோவின் நண்பன் ( தாமஸ் லோவோன் ).
  • மகள் தந்தையிடம் காதல் கொள்ளும் இடங்கள்
  • இளைஞனான ஹீரோ (ஜாக் எபிரோன்) அவனின் காதலியை அதாவது அவனுடைய வகுப்புத் தோழனான மகனின் அம்மாவை ரசிப்பது.
  • ஒரே கோச் இரண்டு இடங்களிலும்.
  • ஒரே மாதிரி களம் இரண்டு உச்சக் கட்ட காட்சிகளிலும்
  • இறுதியில் ஹீரோ அட்ரஸ் எழுதிய காகிதம் கொண்டு கோர்ட் காட்சியில் உணர்ச்சி மிகுந்து காதலை வசிப்பது .

படத்தில் ஹீரோ, டைரக்டர் நிமிர்ந்து நிற்கிறார்கள்.


டைரக்டர் : பர்ர் ச்டீர்ஸ்
எழுத்து : ஜசோன் பிலர்டி

ஹாலிவுட் டுக்கே உரித்தான அழகான ஒளிப்பதிவு. நல்ல திரைக்கதை.

பார்க்க போனால் படத்தில் லாஜிக் இல்லை. இருப்பினும் கற்பனைக்காக பார்க்கலாம். அப்புறம் நமக்கு நாமே சாக்கு போக்கு சொல்ல . இதுதாண்டா விதி ன்னு..

தெரிந்ததும் தெரியாததும்

சிறு சிறுத் துளிகள் இந்தியாவைப் பற்றி :

  • இந்தியா கடந்த ஒரு இலட்சம் வருடங்களாக எந்த நாட்டையும் சூறையாட வில்லை.
  • செஸ் விளையாட்டு இந்தியாவில் தான் உதயம். ( அதான் நம்மை விட மாட்டேங்குது )
  • உலகிலேயே முதல் கிரானைட் ஆலயம் நமது தஞ்சாவூர் பெரிய கோயில். அதன் சிகரம் 80 டன் எடை உள்ள ஒரே கல்லால் ஆனது.
  • உலகிலேயே உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் - ல் உள்ள "சைல் " எனும் ஊரில் உள்ளது.
  • 1896 வரை , இந்தியா மட்டுமே உலகில் டைமண்ட் க்கு மூலமாக இருந்தது.
  • பைலி பாலம் உலகிலேயே உயரமானது.
  • மென்பொருள் உலகில், இந்தியா 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • மொத்தம் 300000 மசூதிகள் இந்தியாவில். உலகிலேயே மிக அதிகமானது.
  • யோகா இந்தியாவில் உதயமானது.
  • மிக முக்கியமானது : 1985 வரை இந்தியா வில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது இல்லை.
  • இந்தியாவின் அழகு, தாஜ் மஹால் கட்டப்பட 1000 யானைகள் உபயோகப்படுத்தப் பட்டதாக தகவல் .
  • அதிகமான சினிமா, ஒரு வருடத்தில் இந்தியா வில்தான் அதிகம் வெளியாகிறது.
  • இந்தியர்கள் ஒரு வருடத்தில் மூன்று பில்லியன் முறை தியேட்டர் செல்கிறார்கள். சினிமா பார்க்க
  • முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின் தக்ஷஷீலா , 700 கி.பி

Thursday, May 6, 2010

சும்மா.. செல்லு செல் ஆ பெயர்த்து எடுத்துடனும் டா !!!

ஆராய்ச்சியாளர்களின் விடாத முயற்சி, சிறிது மகிழ்ச்சி தர கூடிய முடிவைத் தந்துள்ளது. முழுவதுமாக இல்லையானாலும் முதற்படி வைத்தனர் அவர்கள்.

கடந்த வருடம் 27000 நபர்களைக் கொன்றதாக சொல்லப் பட்ட முயற்சி, மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகு 512 பேரின் ஆயுட்க்காலத்தை நீட்டித்ததாக முடிந்தது.

"முயற்சி திருவினையாக்கும்" .

மருந்து ஒன்றும் புதுதில்லை, நோயாளியின் செல்களே மருந்து என்கிறார்கள் .

"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்" என்ற நமது முன்னோர் வார்த்தை எவ்வளவு தெளிவானதொன்று. பலே பலே

நோயாளியின் உடலில் இருந்து எதிர்ப்புச் சக்தி உள்ள செல்களைப் பிரித்தெடுத்து , அதை ப்ராஸ்ட்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களில் உருவாகும் புரதத்தோடு இணைத்து ,அதை மீண்டும் பாதிக்கப்பட்ட செல்களில் செலுத்தும் போது, அது புற்றுநோய் செல்களைத தாக்குகிறது என்பது boston ஐ சேர்ந்த philip kantoff ன் விவாதம்............... சபாஷ் டாக்டரே !!!!

அவர் மேலும் சொல்கிறார் " இன்னும் 5 முதல் 10 வருடங்களில் மற்ற அனைத்து விதமான புற்றுநோய்க்கும் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து காண்பிப்பேன்" ..........
என்னாப்பா பேசிகிட்டே போர !!!
நாங்களும் சொல்வோம் எங்க ஊர்லயும் ஒரு டாக்டருக்கு IQ அதிகமாய்த்தான் இருந்ததுதுதுதுது ......

Wednesday, May 5, 2010

அழிவுக்கும் மழை ...

அவள் என்னைப் பார்த்தாள்,
என்னுள் சாரல்;
என்னைப் பார்த்து சிரித்தாள்,
சாரல் இப்போது தூரல்;
என்னிடம் பேசினாள்,
தூரலுக்குப் பிறகு சிறு மழை;
காதலைச் சொன்னாள்,
நல்ல மழை;
காலம் கடந்தது , அப்பா அம்மா என்றாள் ,
மழை இன்னும் விடவே இல்லை ;
இப்போது புரிந்தது - அது
விளைச்சலுக்கு அல்ல
வெள்ளத்துக்கு. .

எனது பொன்மொழிகள்

* திருமணம் முடிந்தது ;
முதல் வருடம் : அவன் பேசினான், அவள் கேட்டாள் ;
2 வது வருடம் : அவள் பேசினாள், அவன் கேட்டான் ;
3 வது வருடம் : இருவரும் பேசினர் , ஊரே கேட்டது
* திருமணம் ஆவது என்பது நண்பர்களுடன் நல்ல உணவு விடுதி செல்வது போன்றது ;
நமக்கு தேவையானதை ஆர்டர் செய்த பிறகு, நண்பன் ஆர்டர் பண்ணத பண்ணிருக்கலாமோ , அது நல்லா இருக்குமோன்னு தோணும்
* காதல் என்பது கனவு காண்பது போன்றது, கல்யாணம் என்பது அதுக்கு நாமே வைத்துக்கொள்கிற அலாரம் போன்றது.
* திருமணத்துக்கு முன்னால் பெண்ணின் கைப் பிடித்தால் அது காதல் , திருமணத்துக்குப் பின்னால் அவள் கைப் பிடித்தால் அது தற்காப்பு
( அவளிடமிருந்து )
* திருமணமான புதிதில் ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் நமக்கு காரணம் புரிகிறது , பத்து வருடங்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருந்தால் ஆச்சர்யம் தான் வருகிறது .
*காதலன் காதலியிடம் சொன்னான் " அன்பே, உனக்காக நான் நரகம் கூட செல்வேன்" . திருமணம் நடந்தது. உண்மையில் அவன் வாக்குத் தவறாதவன்.
* நண்பன் உன் மனைவியை விரும்புகிரானேன்றால், அதை விடப் பெரிய வழியில் எப்படி அவனைப் பழி வாங்கிட முடியும் உன்னால்.
* திருமணமானவன் பெண்டாட்டிக்காகக் காரின் கதவைத் திறக்கிறான் என்றால், ஓன்று அவன் கார் புதிது, இல்லை அவன் பெண்டாட்டி .

மனிதாபிமானம்.

ஒரு மேடை, அதில் பேச்சோ, கருத்தரங்கமோ, கவிதையரங்கமோ எதோ ஓன்று மிக விமரிசையாக நடக்கிறது. யாரோ பேசிக் கொண்டிருக்கிறார். மேடையில் பல பேர் வழக்கம் போல அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது அங்கே எல்லா இடத்திலும் உள்ளது போலவே ஒருத்தர் தாமதமாக வருகிறார் . வந்தவர் படிகளில் இடற எல்லோரும் தடுமாறி அவரைக் காக்க விரைகிறார்கள் ஒருவரைத் தவிர. அவர் அமர்ந்த இடத்திலேர்ந்து எழவில்லை.

பாரி சொல்கிறார் அவருக்கு கேட்காத மாதிரி, "ச்சே, என்ன மனிதரப்பா , ஒரு மனிதாபிமானம் வேண்டாம் மனிதருக்கு. அப்படியே கல் மாதிரி உட்கார்ந்து இருக்காரே " .
நிலைமை கட்டுக்குள் வந்தது. பாரியின் கைப்பேசி ஒலித்தது. உரையாடல் முடிந்து அணைத்து, அவர் தம்பிக்கு அழைத்து சொன்னார் " டேய், அம்மாவை போய் பாரு, ஹார்ட் அட்டாக்காம். எனக்கு மீட்டிங் முடிஞ்சு சின்ன பார்ட்டி இருக்கு . நாளைக்கு வரேன். "

மனிதாபிமானம்.

Tuesday, May 4, 2010

யாரும் விளக்கம் தர இயலுமா?



ஆச்சர்யமானது.. யாரிடமாவது பதில் உண்டா ? இது என்னவாக இருக்கும்?

இந்தப் புகைப்படம் எடுக்க பட்டது தெற்கு ஆப்ரிக்காவில். எடுத்தவர் சொல்கிறார், அவர் ஒரு ஆராயிச்சியாளர், பேய்களிடம் நம்பிக்கை இல்லாதவர்,
இதை அவர் அவருடைய கைப்பேசியில் அவரது வீட்டு சாளரம் வழி எடுத்தாராம். புகைப்படத்தில் உள்ள பெண் எடுக்கும் போது அவ்விடத்தில் இல்லையாம்.
இது உண்மை என்றும், யாரிடமிருந்தும் பெற வில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.
புகைப் படத்தை இணைத்துள்ளேன்.

விமர்சனங்கள் வரவேற்கப் படுகிறது.

Monday, May 3, 2010

பத்து வழிகள்

யோசித்து யோசித்து , இப்போ எப்படியெல்லாம் யோசித்தால் புதுசா யோசிக்கலாம்னு கண்டு பிடிச்சு இருக்கேன் .

பத்து வழிகள் சிறப்பாக யோசிக்க ,
1, நல்லாவே யோசித்து எழுதுற பத்துப் பேரோட பேசுவோம் .
2, புதுசு புதுசா இடங்களை சுற்றிப் பார்த்து , பார்த்ததை நினைத்துப் பார்ப்போம்.
3, ஒரு விசயத்த குழந்தையா, கலைஞனா, பெண்ணா, நண்பனா , சாதரணமானவனா இப்படி பல வழிகளில் யோசிச்சு பார்ப்போம் .
4, சந்தோசமா சினிமா பார்ப்போம் .
5, நம்மளுகுள்ளேயே எதாவது குண்டக்க மண்டக்க கேப்போம். அதாவது நாயோட மொழிய எப்படி கத்துக்கலாம்? மாம்பழம் பழுத்ததும் ஏன் மஞ்சள் நிறமாக உள்ளது? நமது கால்களுக்கு ஏன் கால்கள் என்று பெயர் வைத்தார்கள்?
6, இயற்கையோடு இணைந்து வாழ்வோம். மரம், செடி, கொடிகளை ரசிப்போம், நிலவை அழைப்போம், இருளை ஏமாற்றுவோம், வெளிச்சத்துக்கு விளக்கேத்துவோம் .
7, பாடல்கள் கேப்போம்.
8, ஒரு நோட் எடுத்துட்டு பாருங்கப்பா நானும் எழுதுறேன்னு என்னல்லாம் யோசிக்கிறோமோ எல்லாத்தையும் எழுதுவோம்.
9, எதாவது ஒரு வார்த்தை வச்சுட்டு எவ்ளோதான் நம்மால் எழுத முடியுதுன்னு பார்ப்போம்.
10, தனிமைல யோசிப்போம்





அப்புறம்

ஆரம்பிச்சுட்டேன், என்னடா எழுதலாம்னு யோசிக்கிறேன் யோசிக்கிறேன் யோசிக்கிறேன் .. ( இன்னும் பத்து, பதினைந்து முறை எனக்காக யோசிக்கிறேன்னு படிங்க , ரொம்ப யோசிக்கிறேன்)
இப்பதான் தெரியுது ,
எனக்கு கதை எழுத வராது, கட்டுரை எழுத வராது, உரை நடையும் வராது, கவிதை வராது,
சரிங்க, அப்புறம் என்ன hair குடா எழுத வந்தன்னு என்னையே நான் கேட்டேன். (நீங்க கேக்குறதுக்கு முன்னாடி)
பதில் ,
" எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணே !!!"

அறிமுகம்




வணக்கம்