கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Tuesday, June 7, 2011

ஆபீஸ் (தலை)விதி-கள்


01 . பாஸ் கூறியது தவறே ஆனாலும் பாஸ் சொல்லே மந்திரம்

02 . கடின உழைப்பு, அதிக வேலை ஈட்டித் தரும்; கூடவே மற்றவர்களுக்கு மட்டும் (பாஸ் உம் சேர்த்து) சம்பள உயர்வு, சன்மானம், தக்க சம்பள உயர்வும் தரும்

03 . சிறந்த புத்திசாலித்தனம், அதிக முயற்சி, அதிக ஈடுபாடு என மொத்த உழைப்பையும் நமது காலை வார மட்டும் பயன்படுத்துவோர் மட்டுமே பக்கத்தில் இருப்பர்

04 . நன்றாக வேலை செய்பவர் எனில் எல்லா வேலையும் கிடைக்கும்; ரொம்ப நல்லா வேலை பார்த்தால் வெளியே போக நேரிடும்

05 . பாஸ் ஆணி புடுங்கணும் என பேசும் போது கவனிக்க, அது அவரை உள்ளடக்கி அல்ல

06 . நீ என்ன வேலை செய்கிறாய் என்பது பெரிதல்ல; என்னவெல்லாம் செய்தாய் என சொல்லத் தெரியும் என்பதே பெரிது

07 . திடீரென கிடைக்கும் சன்மானம் என்பது கூர்மையான ஒன்றை நம் ஆசனத்தில் வைத்திருக்கார்கள் என்பதை காட்டும்

08 . அங்க போ; இங்க போ ன்னா போகணும்; இல்லேன்னா மேல போக முடியாது

09 . ஆபீஸ் நேரத்தில் என்ன செய்வதன்று தெரியவில்லை என்றால், வேகமாக நடக்கணும், கவலையாய்த் திரியனும்; கையில் பைல் இருக்கணும்

10 . எந்த செலவாய் இருந்தாலும் காண்பிக்க ஒரு வார்த்தை "miscellaneous "

11 . நீ எவ்வளவு வேலை பார்த்தாலும், போதுமான அளவு இல்லை என்பதை உறுதி கொள்க

12 . உனக்கு கொடுத்த வேலையைத் தவிர மற்ற எந்த வேலையையும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்

13 . ப்ரோமோஷன் பெறுவதற்கு உனக்கு வேலை தெரிவது முக்கியம் இல்லை; தெரிந்த மாதிரி சொல்லத் தெரியணும்

14 . எந்த ஒரு பிரச்சினைக்கும் காரணம் கடைசியாக கம்பெனியிலிருந்து வெளியேறியவன்

15 . கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, எல்லாவற்றிக்கும் மேலாக ஆபீசில் அமர்ந்து ட்வீட், ப்ளாக் விண்டோ திறந்து வைக்கவில்லை என்றால் அவர்களுக்கு அடிமை சிக்கினான் என அர்த்தம்