கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Tuesday, July 23, 2013

கல்யாணம், காஃபி

சீன் 1

காலை எட்டு மணி. .
டேய் மச்சி. . எத்தன நாள்தான் இப்படியே சுத்திட்டு இருப்ப. . என்ன மாதிரி சட்டு புட்டுன்ன்னு கல்யாணம் பண்ணிக்க மச்சி. இங்க பாரு..  போன வாரம் கல்யாணம் ஆச்சு. . நான் எவ்ளோ ஜாலியா சுத்திட்டு இருக்கேன். . என் பொண்டாட்டி தங்கம் மச்சி. . காலையிலேயே ஏஞ்சி காஃபிலாம் போட்டுக் கொடுத்து கலக்குறா. ஒரே குஜால்தான் போ... சரி சரி அவ வீட்டுல தனியா இருப்பா. . நான் கிளம்புறேன்டா. . பாப்போம். . 

என்னைப் பேசவே உடல. . 
ஒரு வாரம் ஹனிமூன் போறேன்டா, வரட்டாஆஆஆஆஅ

ஒரு மாசம் ஆச்சு. . . 

சீன்2 

காலை 8 மணி. . 
என்னடா மச்சி இன்னுமா இப்டியே இருக்கன்னு ஆரம்பிச்சான். . அத விடுடா, நீ எப்டி இருக்க. . எப்டி போகுது புது லைஃப்ன்னு கேட்டேன் . . அதுக்கென்னா மச்சி சூப்பர்டா. . என் பொண்டாட்டி காலைலயே எஞ்சிறா தெரியும்ல. . சரி விடுடா. . காலைலயே நின்னு பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது. . காஃபி பொடி வாங்கிட்டு வர சொன்னா. . வாங்கிட்டு போகனும். . பை மச்சி. 
நீ நடத்துடா, நானும் கிளம்புறேன். . பை டா. . 

இன்னும் ஒரு மாசம் ஆச்சு. .

சீன் -3

இரவு 9 மணி. .

டேய் மச்சி. . எங்கடா. . சினிமாவா . . எஞ்சாய் பண்றடா லைஃபன்னு நான் ஆரம்பிச்சேன். .  அவனும். "ஆமாம்டா. . ஜாலியாத்தான் இருக்கு. .ஆனா அவளுக்கு இப்போலாம் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போய்டுதுடா.அவளால எழுந்துரிக்கவே முடில. . பாவம் மச்சான் அவ. . அதான் காஃபி வாங்கிட்டு போறேன் டா. . என்னவோ தெரில ஹாட் சிப்ஸ் காஃபி அட்டகாசமா இருக்கு மச்சி. சரிடா. . அவ பாவம் . .போய் காஃபி கொடுக்கிறேன்.

சீன் 4
காலை 7 மணி.

என்னடா இவ்ளோ சீக்கிரம் வாக்கிங் வந்துட்டன்னு அவனே முந்திகிட்டான்.. . ஃபிகர் ஒருத்தி வரேன்னாடா. . ஜாலியா கடலைய போட்டுட்டு போலாம்னுதான் வந்தேன்.. . சரி நீ ஏன் சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். . இல்ல மச்சி. . சீக்கிரம் வீட்டுக்கு ரிட்டர்ன் ஆயிட்டா அவளுக்கு காஃபி போட்டு கொடுக்கலாம்னுதான். திட்டுவாடா.. .  நீ எஞ்சாய் பண்ணுடா. . கிளம்புறேன்னு போய்ட்டான்

சீன் -5
இன்று. . இப்பொழுது..

மச்சான் . . அவ அடிக்கிறாடா!!! வலிக்கிது மச்சின்னு ஆரம்பிக்கிறான். . 

இருங்க. கொஞ்சம் என்ன சொல்றான்னு கேட்டுட்டு வரேன் :

Tuesday, February 26, 2013

கோயில்; கொய்யா; அடப் போங்கய்யா..


ஞாயிறு கிழமைகளை வீணாக்க வேண்டாம்; கூடிய சீக்கிரம் கால் கட்டு உறுதி என தெரிந்த பிறகு இரண்டு வாரம், எதோ சொன்னார்கள் நேர்மறை அதிர்வுகள் அது இதுவென்று எனக் கேட்டு, இரு பழம் பெரும் கோயில்களை தேர்வு செய்தேன் சுற்றிப் பார்க்க. . .

முதல் வாரம் திருவண்ணாமலை
இரண்டாவ்து வாரம் திருவானைக்காவல் கோயில்

முதல் வாரம்

தரையில் படுத்து வானத்தை பார்த்துக் கொண்டிருப்பவன் அருகில் நமிதா, விஸ்வரூபம் கொண்டு நேர் நடையில் மேலே பார்க்கும் போது படுத்துருப்பவனுக்கு நமீதா தலை (தெரிவது கஷ்டம்) வானத்தை முட்டுவது போல் தெரியும்.

அதே ஃபீல் முன் வாசல் கோபுரம் பார்க்கும் போது, (எத்தந்தண்டி !!! )

நல்ல பையனாய் கால் கழுவிட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் முன் பக்கமும் அலை பாய்ந்த வேட்டியை எப்ப்டியோ கன்ட்ரோல் ல வைத்துக் கொண்டு முன்னாடி நடந்து போனேன் நண்பனுடன்.

நடிகை ஷர்மிலி போல் மிகப் பெரிய வளாகம்;  அங்கங்கே கூட்டம்;  நிதானமே பிரதானம் என்று முட்டாமல் முந்தாமல் பொது வரிசையில் போனோம்.

எங்களுக்கு முன்னால் ஆந்திர மாநில அரசு பள்ளி மாணவர்கள்; வரிசையில் வரும் போதே மச்சான் உன் ஃபிகர் பின்னாடி வருதுடா, அய்யோ பாத்து சிரிக்கிறாடா என்ற வசனங்கள்.
நமக்குத்தான் அந்த வரிகள் மட்டும் எந்த பாஷையானாலும் புரியுமே.

ஆனாலும் நடை உடை பாவனை பாஷைகளிலேயே தெரிந்து விடுகிறது, எந்த மாநிலமானாலும் அரசு பள்ளி அடையாளம்.

எல்லாம் முடிந்து இறுதியில் வரும் போதுதான் பார்த்தேன் இருட்டான கருவறை முன்பு மூன்று வரிசைகள்.

சாமி ஆசிர்வாதம் பண்ணலாம் என நினைத்து கை தூக்கும் போது தெரியாமல் பட்டே ஆசிர்வாதம் கிட்டும் படி இருக்க 50 ரூபாய் வரிசை,

கொஞ்சம் எட்டித் தூக்கி ஆசிர்வாதம் செய்ய 20 ரூபாய் வரிசை,

அனுஷ்காவைக் கண்ட அடிமட்ட ரசிகர்கள் ஆரவாரத்தோடு தூரமாய் இருக்க அங்கிருந்து அம்மணி கை காட்டுவதாய், இங்கே சாமியோட‌ ஆசிரவாதம் இலவச தரிசனம் செய்பவர்களுக்கு,

ஆக, எழைகளுக்கு சாமியோட ஆசிரவாதம் கொடுக்கனும்னாலே வட்டிக்கு பணம் வாங்கிட்டு வரணும் போல.

சந்தோஷமான விஷயம் ஜாதி இல்லை அங்கே, ஆனால் இப்போது பணம் எனும் வியாதி.

இன்னும் கொடுமை , திருச்சி அருகே திருவானைக்காவல் கோயிலில்.  . . வரும்