கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, March 25, 2011

இத மட்டும்டா; என் ராசால்ல....

இளைஞன் ஒருவனின் கல்விப் பயணத்தைக் கேட்பவருக்குத் தெரியும்,  அவன் உறுதி செய்யப் பட்ட பயணச் சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யாத பெட்டியில் மிகுந்த சோகத்துடன் பயணத்தை சொல்வான் என்று.

பத்தாவது படிக்கும் போது அம்மா தரும் ஆறுதலான சொற்றொடர், " டேய், இந்த வருசத்தை எப்படியாவது கஷ்டப் பட்டு படிச்சுடுடா, நல்ல ஸ்கூல் ல இடம் கிடைச்சுதுன்னா எந்த பிரச்சினையும் இல்ல" .என்னவோ பக்கத்து வீட்டு பொண்ணு வந்து இவன் சைக்கிள் சூப்பர் டா சொல்லிட்ட மாதிரி சந்தோசம் வந்துடும் இவனுக்கு. அப்பாடா இந்த வருசத்தை மட்டும் படித்து தொலைத்தால் போதும் என பொண்ணுங்க ஸ்ட்ரச்ஷர் ல ஜியாக்ரபி படிக்க வேண்டியவற்றையெல்லாம் முக்கி முனவி இமயமலை, தக்காண பீடபூமி தட்டு தடவி முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏற எழுதப்படாத ஒப்பந்தத்தில் ஒரு கையொப்பம் போட்டு வைப்பான். அடிமை சிக்கினான்.


பத்து பசங்க கூட கிரிக்கெட், தெரு முக்கத்துல அட்டேண்டன்சு, வயசுக்கு வந்த புதுசுல கடலைக்கான ஏக்கம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து இவனும், " தி டப்போடில்ஸ்" என பொட்டை மனனம் செய்து நல்ல மதிப்பெண்ணும் வாங்கி விடுகிறான். இனி ஜாலிதான் என கனவு கண்டு விழிக்கும் முன்பாக அடுத்த போராட்டம். 

அவன் கனவில் விழுந்த வெடிகுண்டு என அவன் அப்பா சொல்வார், "பன்னிரண்டாவது உன் வாழ்க்கையிலேயே டர்னிங் பாயிண்ட், இத ஒழுங்கா முடிச்சா நல்ல காலேஜ், நல்ல கோர்ஸ்;" பீர்ல பிசிக்ஸ், அவகிட்ட கெமிஸ்ட்ரி, அவ அம்மாகிட்ட எப்படி அவங்க பொண்ண பண்றதுன்னு கணக்கு, இன்னும் கொஞ்சம் மேல பயாலாஜி என கனவுப் பாடங்கள் அனைத்தும் காத்துல போற மாதிரி நாலு சாத்து சாத்துவார் நாலு மார்க் குறைந்த உடன்.

பத்து நாலு தொடர்ந்து, அத பண்ண மாட்டேன் ஆண்டவா, இந்த கல்ல தூக்கிப் போடுவேன் அது அந்த பாலத்தை தாண்டி விழுந்ததுன்னா நான் நல்ல மார்க் வாங்குவேன் என தன பயம் கலந்த பத்தாம் பசலித்தனத்தை வெளிப்படுத்தி எப்படியோ ஆஞ்சநேயர் அருளால பக்கத்துல உள்ளவனைக் காப்பியடிச்சு நல்ல மார்க் வாங்கியாச்சுன்னு பெருமூச்சு ஒன்றை விடுவான்.

மூச்சு காற்று, வளி மண்டலத்தில் கலக்கும் முன்னர், கவுன்செலிங், காலேஜ், செமஸ்டர், பிரக்டிகல், அர்ரியர்ஸ் எல்லாம் வந்து உலுக்கி எடுக்கும் அவன் வாழக்கையை.

இதெல்லாம் இப்போ ஏன் சொல்கிறேன்?

நமது இந்தியாவின் உலகக் கோப்பை பயணமும் இதை ஒத்தே இருப்பதுதான் வேடிக்கை. திக்கித் திணறி டார்ச் லைட்லாம் அடித்து வழி தேடி கால் இறுதி வந்தால் ஆஸி, அரை இறுதி பாக் என அனைத்தும் இந்த மேட்ச் மட்டும் ஒழுங்கா ஆடிடுங்கடா ராசா என டோனி கெஞ்சுவது காதில் கேட்கிறது.

(ஆனா அவர் மட்டும் ஒழுங்கா ஆட மாட்டார் என்பது அப்பா சர்டிபிகேட் ஐ பரணில் தேடி நியாயம் கோரும் சிறுவன் கதை ஆகும்)  

No comments:

Post a Comment