கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Sunday, March 13, 2011

முத்தம், சத்தம், பதற்றம்


வர வர ஏன்தான் இந்த விமலுக்கு இப்படி புத்தி போகுதுன்னே தெரியல. கல்லூரி முடித்தும் இன்னமும் வேலைக்கு போகாமல் பிஸியாக சுற்றிக் கொண்டிருபதுதான் இவனுக்கு வேலை. அவன் அப்பா ரிடைர்ட் என்னவோ. 

இவன் இருக்கும் அப்பர்த்மென்ட் அந்த காலத்து அப்பர்த்மென்ட் என்றே சொல்ல வேண்டும். அதில் 1961 என பொறிக்கபட்டுள்ளதே. விமல் பெற்றோருடன் எப்போ வந்தான், எப்படி வந்தான், என்றெல்லாம் தெரியாது. கேட்டாலும் சொல்ல மாட்டான். திமிர் கொஞ்சம் அதிகம்தான். பார்ப்பதுக்கு வேறு, பார்கிற மாதிரி இருப்பதாக தங்கைகளின் கல்லூரி நண்பிகளிடமிருந்து இவருக்கு செர்டிபிகஷன் வேற. அதைக் கேட்டதிலிருந்தே கொஞ்ச நாளாக யார் இவனிடம் வந்து கேட்டாலும், சிகரெட் பிடிக்கிரதுனால கால் இரண்டு விரகளுக்கிடையே கருப்பு, செருப்பு கடித்ததால் கை விரல்களில் காயம் எனச் சொல்கிறான். தலை கால் புரியாமல் திரிகிறானாம்.

பெண்களைக் கிண்டல் செய்வதே பிழைப்பாக கொண்டு திரியும் ஒரு இளைஞன். வேற வழி இல்லை; யார் பொறுக்கின்னு சொன்னாலும் அடிப்பான்.
இவன் வீட்டுக்கு நேர் எதிர் அப்பர்த்மென்ட் ல் இருக்கும் காவ்யாவை தொந்தரவு செய்வதே இவனுக்கு இப்போதைய வேலை.

அவள், அவள்அம்மாவுடன் வரும் போது கை ஆட்டுவது. தனியாக மாட்டினால் பேச சொல்வது, அவளைக் காதலிப்பதாக சொல்வது, அவளை நிற்கும் போது போடோ எடுப்பது என தொந்தரவு கொஞ்சம் நிறையவே ஆகி விட்டது. இதைக் கேட்டு அவள் அழுவதும் வழக்கமாகி விடும். அழுது கொண்டே இருக்கும் போது இவன் எதையாவது சிரித்து சொல்லி அவள் மறந்து விடுவதும் நடக்கிறது. அதனால் இது வரை அது பெரிய பிரச்சினையாகாமல் இருந்து வருகிறது.

இன்று அது பெரிய அளவில் முத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். உச்சகட்ட தொந்தரவாக, அவளை நிற்க வைத்து ஒரு முத்தம் கொடுத்தால்தான் விடுவேன் என்றான். அவளோ அழ ஆரம்பிக்க, இவன் செய்வதறியாது நிற்க, அவள் ஓடியே விட்டாள்.

அவனுக்கு உச்சகட்ட கோபம். ஒரு கொடூரமான திட்டம் தீட்டினான். நாளை காலை அவள் கதவைத் திறக்கும் போது கட்டிபிடித்து முத்தம் கொடுத்திட வேண்டுமென.

அடுத்த நாள் காலை, இவன் வாசலில் காத்திருக்கிறான். எதிர் வீட்டு கதவு திறக்க வில்லை. அரை மணி நேரம் ஆனது. ஒரு மணி நேரம் ஆனது. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை. இவனது அம்மா வேறு, "டே..இட்லியத் தின்னுட்டு போய் சுத்து. சுத்துற இடத்துல எங்கேயாவது மயங்கி கிடக்க போற" என கிண்டல் தொனியுடன். 

திடீரென எதிர் வீட்டு கதவு திறக்க காவ்யா வெளியே வருகிறாள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே.

தடீரென இவனைப் பார்த்தவள் "அம்மா" என ஒரே கூச்சல். இவன் வீட்டில் இருந்த செருப்பு ஸ்டான்ட்ல் இருந்து ஒரு செருப்பு கீழேயே விழுந்து விட்டது. அந்த அளவுக்கு சத்தம். எல்லாரும் வெளியில் வந்து விட்டார்கள். 

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன கேள்வி கேட்டாலும் திரு திருவென முழிக்கும் மன்மோகன் சிங்க் மாதிரி முழிக்கிறான்.

அவள் வாயைப் பொத்துகிறான் அடாவடியாக. அவளுக்கு கண்ணீர் பீரிட்டு வருகிறது. அவள் அம்மா வெளியில் வரும்போதே "என்ன, என்ன!!" என்று சத்தம் போட்டுக் கொண்டே வருகிறாள்.

காவ்யா அழுதுகொண்டே அம்மாவிடம் " அம்மா, இந்த விமல் நாய் எப்ப பார்த்தாலும் என்ன தொந்தரவு செய்யுது. முத்தம் கேட்டு டார்ச்சுர் மா " என்றால். அவள் அம்மாவுக்கு பயங்கர கோபம்.


" பெரிவங்கள நாய்ன்னு சொல்லக் கூடாதுன்னு உனக்கு எத்தன தடவடீ சொல்றது? " என்றாள் காவ்யாவிடம். 

"நீ போம்மா " என்ற படியே அவள் ஓடி ஏறினாள் ஆட்டோவில் பத்து குழந்தைகளோடு பதினொன்றாய் பள்ளிக்கு போக.  

1 comment: