கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, March 11, 2011

நட்பு


"மச்சான் அவளை பாருடா செம கட்டைடா, அவ ஆளும் சைசும், அப்பப்பா சும்மா கும்முன்னு இருக்காடா, நாம ரெண்டு பெரும் அவல கூட்டிட்டு ஒரு நாள் சினிமாவுக்கு போறோம், நடுவுல உட்க்கார வச்சி நீ இந்த பக்கம் நான் அந்த பக்கம்.. செம குஜால்டா என்ன சொல்ற, " சொன்னவன் விமல், 

பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு. படிப்பு நல்லாத்தான் வரும், ஆனா இப்போதைக்கு அது வர வேண்டாம்ன்னு இந்த தறுதலைதான் தடுத்து வைத்து இருக்கிறது.

கேட்டவன் கமல். அவனோட உயிர் நண்பன். அறை சிநேகிதம். கொஞ்சமும் மன வேற்றுமை இல்லாத நட்பு. ஒரே மாதிரி எண்ணங்கள், இருவருமே புத்தகப் பிரியர்கள், பஸ் பயணம், வாரம் இருமுறை ஹோட்டல், எந்த படம் வந்தாலும் தேவி தியேட்டர் தான் இவர்களுக்கு மாலை நேர வகுப்பறை. வாரம் ஒரு முறை கன்னிமாரா நூலகம். (மேலவன் பார்க்க, கீழவன் படிக்க), மதிய வெயில் அடித்தால் லேண்ட்மார்க் தஞ்சம்.மற்ற படி புண் பட்ட நெஞ்சமும் இல்லை, மாது தோல்வியும் இல்லை. அதாங்க புகையும் இல்லை. மதுவும் இல்லை. மாதுவும் பேச்சளவில். 

கல்லூரியில் எத்தனை பெரிய பேராசியர்கள் பாடம் எடுத்தாலும் விடை தெரியாத கேள்வி இவர்கள் நல்ல பசங்களா கெட்ட பசங்களா?. 

இவர்களுக்கு என்று சிறு கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாத கூட்டம். பெண்களையும் நெருங்கி தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இருவர் மீதிலும் பெண்கள் மத்தியிலிருந்து இருக்கும் ஒரு கம்ப்ளைன்ட், பெண்களை கண்டால் முறைக்கிறார்கள் என; ஆனால் இந்த நாயகர்களைக் கேட்டால் ரொமாண்டிக் லுக் விட்டேன் என்பார்கள்.

சரி இப்போது அவன் சொன்ன வேத வாக்குக்கு வருவோம். "என்னடா சொல்ற" என்று மீண்டும் வினவினான் கையைப் பிசைந்துகொண்டே. 

கமல் கையில் இருந்த எதோ சாமிக்கு நேந்து உட்டு கட்டப்பட்ட கயிறை வாயில் வைத்துக் கொண்டே" டேய் விடுடா அப்டில்லாம் சொல்லாதடா. பாவம் டா " என்றான். அதற்கு விமல் பதிலாக சொன்னது ஒரு கெட்ட வார்த்தை.

வழக்கம் போல இருவரும் எங்கேயோ வெளியில் மேய்ந்துவிட்டு உறங்கி விட்டார்கள்.

மறுநாள் ராகிங் தினம். இவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் வழக்கம் போல எவள் எவளையோ முறைத்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். "டேய் மாப்ள இரு நான் போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன்" என்று வேகமாக கமல் கான்டீன் உள்ளே சென்றான். "எந்த ஜூனியர் பார்த்துட்டு வெறிக்க ஓடுதோ தெரில நாய்" என்று அவன் காது பட உரக்க சொல்லிட்டு விமல் அந்த கம்பியில் உட்கார்ந்தான்.

அப்போது முதல் வரிப் பெண், (அதாங்க குஜால்) ராக்கிங் முடிந்து அந்த பக்கமாக கலங்கிய கண்களோடு வந்து கொண்டிருந்தாள்;

அட எங்க இங்க உட்க்கார்ந்துகிட்டு இருந்த நம்ம விமலைக் காணோம்?

16 மாசத்துக்கு அப்புறம்,

விமல், " டே, அவ ரொம்ப நல்ல பொண்ணுடா. என்னை ரொம்ப நம்புறாடா. உன்கிட்ட கூட சொல்லல, அவளை காதலிக்கிறேன் டா.
......

... டேய் .. அப்புறம்.. அன்னைக்கு சொன்னெதெல்லாம் நினைச்சா வெட்கமா இருக்கு டா"

கமல்  " டேய்.. என்னடா சொல்ற நீயா?

விமல் " ஆமாம்டா. வீட்ல சொல்லிட்டேன். அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ நான் அவளைக் கூட்டிட்டு சினிமாக்கு போலாம்னு இருக்கேன். நீநீநீநீ.." என்று இழுத்தான் ஒரு அசட்டு சிரிப்புடன்.

அதற்கு கமல் சிரித்துக்கொண்டே " டேய் அப்ப சொன்னதெல்லாம், எக்ஸாம் மாதிரிடா, அப்பப்ப கிளியர் பண்ணிட்டே வரணும்; அதெல்லாம் மனசுல வசுகிட்டா டிகிரிய  முடிக்க கஷ்டப் படுறது மாதிரி, வாழ்கையே பாரமா தெரியும். நீ ஏதும் கில்டி ஆ எடுத்துக்காம ஜாலிஆ போயிட்டு வா. நான் அதெல்லாம் மனசுல வச்சுக்கல" என்றான்.

சரி டா மச்சி .. நீயும் வாடா என்றான் விமல் மனசு லேசாக.  

No comments:

Post a Comment