கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, September 27, 2010

ராணுவம் என்றொரு வேலை

நான் சில நாட்களுக்கு முன்பு நாக்பூர் நகரிலிருந்து சென்னை மாநகரம் செல்ல விடுப்பு எடுத்து (சம்பளம் இல்லா விடுப்பு) தமிழ்நாடு அதி விரைவு வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ( தமிழ் பதிவு என்பதால் உங்களை நோக்கி வந்து கொண்டிருந்தேன் என்பதே சரி). அந்த அறையில் என்னுடன் தலைநகரிலிருந்து வந்து கொண்டிருந்த திரு.பரமசிவன் என்ற ஒரு ராணுவ வீரர் பயணம் செய்தார். அவர் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி.

அவருடன் நடந்த உரையாடலில் எனக்கு கிடைத்தவை,

  • அவர் 13 ஆண்டுகளாக பணி செய்கிறார்.
  • பத்தாவது படித்து இருக்கிறார் (பத்தாவது இவருக்கு பத்தியது ராணுவத்தில் சேர)
  • எல்லைப் பாதுகாப்பு படை என்பதால் அவரது வேலை பெரும்பாலும் நமது எல்லை ஒட்டியது.
  • சீன, பாக்கிஸ்தானிய, பங்களாதேசிய எல்லையில் பணி செய்து இருக்கிறார்

அவரது அந்த புகைப்படங்களை பெருமிதத்தோடு காட்டி வந்தார்.

மற்ற எல்லைகளில் பணி செய்வதை காட்டிலும் பாக்கிஸ்தானிய எல்லையில் பணி செய்யும் போது தனித்து விடப் பட்டதாக உணர்ந்திருக்கிறார்.

முக்கியமாக குபோரா என்ற மலைப் பகுதி காஷ்மீரத்தில். சுமார் ௧௮௦௦௦ அடி உயரம். அங்கு வேகமாக நடந்தாலே பிராண வாயு தேடலில் நம் பிரானமே போய் விடும். மேலும் அங்கு மற்ற அடிப்படை வசதிகள் என்று (மின்சாரம், உணவு) ஏதும் இல்லை. காடு விலங்குகள் புலி, சிறுத்தை அங்கு சாதரணமாக விளையாடும். ( புலி மனித இனத்தை உண்ணுவதில்லை என்பது அவர் வாயிலாக எனக்கு கிடைத்த செய்தி. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்). உணவு மிக சிறப்பாக கிடைக்கும் என்றாலும் காலையில் குதிரைகள் அந்த மலை அடிவாரத்தில் இருந்து பொதி சுமந்து வருமாம் மாலைக்குள், அடுத்த நாள் மூன்று வேலை உணவை சுமந்து. அவர்கள் பயணமும் குதிரையில் தான்.

அவர் தங்கும் இடங்கள், வேலை அனைத்தும் என்னை கலங்க வைத்தது. ஆனால் அவரது பதில் நாட்டுப் பற்றை வெளிப் படுத்துவதாக இல்லை. "பத்தான் கிளாஸ் படிச்சா இந்த வேலை கிடைச்சதே பெருசு" என்றார். அது சேவை இல்லை வேலை என்பது புரிந்தது. ஆக சுரங்கங்களில் வேலை செய்பவரும் ராணுவத்தில் வேலை செய்பவரும் ஒன்றே. வேறு வழி இல்லை அதனால் இந்த வேலை.

ராணுவத்தில் வேலை செய்பவர்களை குறை சொல்வது நோக்கமில்லை. ஆனாலும் நாட்டுக்காக ராணுவம் என்பது வெகு நாட்களாகவே ( நமது சுதந்திரத்திற்கு பின்னர் ) இல்லை. இது கட்டின கணவனை விட்டால் வேறு வழி இல்லை பிழைக்க, என பிள்ளை பிறக்கும் வரை நம்பி வாழும் பெண்ணினத்தைப் போன்றது.

மேலும் முக்கியமானது, அங்குள்ள மக்களைப் பற்றி அவர் சொன்னது,

இந்திய ஆட்களுக்கு தண்ணீர் கூட தருவதில்லையாம். கல்லால் அடிக்கவும் செய்வார்களாம். கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது கூட பாக்கிஸ்தானிய சட்டை அணிந்து " பாகிஸ்தான் ஜிந்தாபாத் " எனும் கோஷம் தான் பலமாக இருக்குமாம். ராணுவ வீரர்களிடமிருந்து திருடியும் செல்வார்களாம்.

அவர்களை மக்கள் எனும் மாமிச பிண்டங்கள் என்பேன்

5 comments:

  1. @RRR

    அந்த காஷ்மீர் கிராம மக்கள் தம்மை பாகிஸ்தானியராகவே உணரக்கூடும் (கணிசமான‌ பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அப்படி நினைப்பதாகவே தோன்றுகிறது). அப்படியிருக்கையில் அவர்கள் இந்திய ராணுவத்தினரை அப்படி நடத்துவதில் என்ன முரண் அல்லது ஆச்சரியம் இருக்கிறது.

    இது அறம் சார்ந்த பிரச்சனை மட்டுமே. இங்கே தேசியம் உள்ளே வரவில்லை.

    தவிர, சேவை என்கிற சொல் வழக்கொழிந்து கிட்டதட்ட முக்கால் நூற்றாண்டாகிறது, நண்பரே - இப்போது எல்லாமே வியாபாரம் தான்.

    ReplyDelete
  2. Those people consider him as a man who come to demolish them. They didn't know that who come to save (army) and who come to demolish (terrorists. And the terrorists may make a fear about helping to army

    ReplyDelete
  3. அரசியல் வியாதிகள் எல்லாம் மந்திரிகளாகி நாட்டுக்கு சேவை பிழியவா வர்றாங்க?

    அதுவும் இன்னிக்குக் கணக்குலே வேலைதான் வியாபாரம்தான். மக்களுடைய வரிப்பணத்துலே மஜாவா இருக்காங்க. இன்னும் வரப்போகும் 100 தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதில்தான் கண்ணு.

    எல்லையில் பலகஷ்டங்களுக்கு மத்தியில் சரியான சாப்பாடு கூட இல்லாமக் கஷ்டப்படும் வீரர்களிடம் சேவை மனப்பான்மையை எதிர்பார்ப்பது நமக்கே நியாயமாத் தோணுதுங்களா?


    கோவிச்சுக்காதீங்க. இது என் சொந்தக் கருத்து மட்டுமே.

    ReplyDelete
  4. @சி. சரவணகார்த்திகேயன்,
    நண்பரே முதலில் தங்கள் கருத்துக்கு நன்றி. பதிலுக்கு செல்லும் முன் தீவிரவாதம் பற்றியும், புரட்சி பற்றியும் உங்கள் நிலைப் பாட்டை பின்னர் தெரிவியுங்கள் எனக்கு. தெற்கு பகுதியில் ஒரு சாரார் உரிமைப் போராட்டத்தில் அந்த நாட்டில் போராடும் போது கொலை செய்யப் படுகிறார்கள். அவர்களை நமது நாடுகளிலும் உள்ளே விடுவதில்லை. ஆக இந்திய அரசியல் சட்டப் படி ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்ற நாட்டின் மீது பற்று கொள்வது குற்றம் இல்லை எனினும், அதை பகிரங்கமாக, தீவிரவாதமாக வெளிபடுத்துவது சட்டப் படி குற்றமாகும். மேலும், இவ்வாறு பகிரங்கமாக செய்பவர்கள் அவர்களுக்கு துணை போகவில்லை எனக் கூற இயலுமா ? மேலும் அவர்கள் அங்கு காவல் காக்கும் வீரர்களிடம் எதிர்ப்பு தெரிவிப்பது நேயப் பொருத்தும் குற்றமே.

    ReplyDelete
  5. kashmiris are useless luggage for india, india gave all the facilities to them. in reply they are insulting and killing our people. you know in pok(pakistan occupied kashmir) kashmiris are treated as coolies, punjabi chooudris ruling like their own house.

    we should kill all kashmiris.

    ReplyDelete