கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, April 20, 2011

செலவில்லை; மருந்து மட்டும்

மிக நீண்ட நாளாக தொடரும் தொல்லை, வயதானவர் ஆன பீல் இருக்கிறதா, ஒரு நாள் தொப்பை சாப்பிட்டவுடன் தெரிகிறதா, வாங்க வாங்க பாஸ், மருந்து இல்லை, மாத்திரை இல்லை, ஊசி இல்ல; ஹன்ஷிகா மாதிரி இருப்பவர்களுக்கு தமன்னா மாதிரி ஆகணுமா வாங்க பாஸ் வாங்க பாஸ். .


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதே! இதே !!

நல்ல ஜீன்ஸ் பேன்ட் (எந்த ப்ரண்ட் என சொன்னால் விளம்பரம் மாதிரி ஆகிவிடும் என்பதால் பொதுநலம் கருதி தவிர்க்கிறேன்), ரொம்ப இறுக்கமாகவும் இல்லாமல், ரொம்பவும் தளர்ந்தும் இல்லாமல் சரியான அளவில் பொருந்துவதாக இருத்தல் நலம். உடம்பின் மேல் பகுதியில் அரைக்கை சட்டை உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இருக்கலாம். கொஞ்சம் ஸ்டைல் ஆக இருந்தால் வசதி. அதை இன்ஷிர்ட் செய்ய வேண்டாம்; கூலிங் கிளாஸ் போடாமல் இருப்பதும், போட்டு இருப்பதும் உங்கள் வசதியை பொறுத்து இருக்கட்டும்.

அலுவலகத்தில் உங்களது நாற்காலி, உயரத்தை மேலும் கீழும் உயர்த்துவதாகவும் தாழ்த்துவதாகவும் இருப்பது அவசியம். தற்போது மதிய உணவு இடைவேளை முடிந்த உடன், மற்றவர்கள் அவர்களது இருக்கைக்கு வரும் முன்னர், திட்டிக் கொண்டே பியூன் எனும் மேலதிகாரி கொண்டு வரும் தேநீரை அருந்தி விட்டு பின்வருமாறு செய்ய வேண்டியது;

நாற்காலியின் உயரத்தைக் காட்டிலும் ஒரு ஒரு அடி உயர்ந்த (உயரம் ரொம்ப அவசியம்) உங்களது மேசை அல்லது வேறு தோதான இடத்தில் உங்களது இடது காலை தூக்கி வைத்து (படுக்க போட்ட 7 எண் மாதிரி ) உங்கள் வலது காலை அதன் மேல் போட்டு (அட்டணக் கால்) அமர்ந்த சிறிது நேரத்தில் மாற்றங்களைக் கவனிக்கவும்.

நெஞ்சும் மேல் வயிறும் தொடும் இடத்திலிருது புலி உறுமுவதும், சிங்கம் கர்ஜிப்பதும் மிக்ஸ் ஆகி டிஜிட்டல் சவுண்ட் எபக்டில் ஒரு சத்தத்தை நீங்கள் உணர்வீர்கள். அது மெல்ல அப்படியே கீழே உருண்டு வெளியேறும். அதை ஒட்டி உங்களது உப்பலான வயிறு சிறிது உட்சென்று வந்ததும் உங்களுக்குள்ளே ஒரு மாற்றம். மகிழ்ச்சி. என்ன ஸ்னேஹா சிரிச்சா கூட இப்படி ஒரு மகிழ்ச்சி கிட்டுமா என நினைப்பீர்கள்.

இப்பொழுது புரிகிறதா ? இந்த இயந்திர வாழ்வில் காலையிலேயே அவளிடம் சண்டை போட்டும் போடாமலும், உணவு உண்டும் உண்ணாமலும் சென்று அலுவலகத்தில் அமர்ந்து பின்னர் மதியம் பஜ்ஜி, சொஜ்ஜி, பீசா எனக் கண்டதையும் ருசித்து இறுதியில் தேநீர் என அதையும் குடித்து வைக்கும் உங்களைப் போன்ற வயதான ஆன்மாக்களுக்கு வரும் வாயுத் தொல்லைக்கே இத்தகைய மருந்து.
- கருவாளிப் பூனை

No comments:

Post a Comment