கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Tuesday, February 25, 2014

பிரம்மன்

                     
                    எனது நண்பர் மிகவும் திறமைசாலி.  எனது பள்ளிப் பருவத்தில் பழக்கம். என்னிலும் 5,6 வருடம் பெரியவர்.

படங்களில் மிகவும் நாட்டம் கொண்டவர். படங்களை அச்சு பிச்சுவாக பிரித்து ஆராய்ந்து நுணுக்கங்களை வெகு சுலபமாக வெளிக் கொணர்வார்.  அந்த காலத்து சினிமா டெக்னிக்ஸ் அனைத்தும் அவருக்கு கை வந்த கலை.

அதே நேரத்தில் அவரிடம் மிகவும் தவறான பழக்கம் பைக்கை வெகு வேகமாக செலுத்துவது.
இரண்டு மூன்று முறை தவறி விழுந்து விழுப்புண்ணும் வாங்கி இருக்கிறார்.

அவர் எதோ பெரிய இயக்குநரிடம் உதவை இயக்குநராக பணி புரிவதாகவும் நல்ல ஸ்க்ரிப்ட் வைத்துக் கொண்டு படம் இயக்க முயலுவதாகவும் எனக்கு ஃபோனில் தெரிவித்தார் சரியாக 17 வருடம் 264 நாட்களுக்கு முன்பு.

சொன்ன ஒரு சில (7) நாட்களில் எதிர்பாராத துரதிருஷ்ட வசமாக ஒரு விபத்தில் பலமான அடி. கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்நாட்களில் மருத்துவ வசதி வேறு கொஞ்சம் குறைவு.

அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள். அவரைக் கோமாவில் இருந்து மீட்க முடியாமல் போனது.

2014 ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம் தெளிவு பிறந்து, 20 பிப்ரவரி முற்றிலுமாக குணமானார். ஆடிய கால் சும்மா இராதே. உடனே சினிமா பார்க்கலாம் என்றார். பிறகு பார்த்த முதல் படம் "பிரம்மன்"

உடனே அவர் தந்த‌ விமர்சனம் :

காலத்திற்கேற்ப டெக்னிக்ஸ் பயன்படுத்தி கச்சிதமான இயக்கத்தில் ட்ரென்டியான ஹீரோ வைத்து எடுக்கப்பட்ட நல்ல படம்.

பிகு : அவரைப் பொறுத்த வரை காலம் என்பது 17 வருடம் 272 நாட்களுக்கு முன்பானது. .