கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, January 20, 2014

புனைவு

4 வது அவென்யூவின் முக்கம் வரை நடந்ததும் சின்ன சந்தேகம், பர்ஸை எடுத்து வைத்தவனுக்கு பர்ஸுக்குள்ள பணம் வச்சோமான்னு. . சரின்னு பின்னாடி பாக்கெட் ல கைய விட்டா பேண்ட்டே கீழ இறங்குது; அடச் சை.. பெல்ட் போடல. குனிந்து பார்த்தா, ஜட்டி வரைக்கும் தெரியுது.

நிமிர்ந்தால், லெஃப்ட்ல  பெல்ட் கடை, ரைட்ல‌ காண்டம் கடை; எதுக்குப் போகலாம் என ஒரு நிமிடம் கூட யோசிக்கல. அதுக்குள்ள‌ கால் வலப்பக்கம் திரும்ப, சரி போகலாம் என பேண்ட்டை அரைஞாண்கயிற்றில் ஒரு சுற்று சுற்றி விட்டு நடந்தாச்சு.

என்ன ஃப்ளேவர் வாங்கலாம் என ஆள் காட்டி விரலைத் தாடையில் வைக்கும் போது நேற்று இரவு, யாரவள்......... சங்கீதாவோ, ஷாலினியோ , செ. . என்ன ஸ்மெல்டா. . ஸ்ட்ராபெர்ரியா இருக்குமோ. . என்ன இருந்தாலும் அவ போட்டுருந்த ஃபெர்ஃபுயூம் மட்டும் செம வாசனை. . ஆனா ஆம்பளைங்க மட்டும் போடுற ஓன் மேன் ஷோ வ என்ன கருமத்துக்கு அவ போட்டுருந்தா. . பைத்தியக்காரி. .

ஆமாமாம் பைத்தியக்காரிதான் என் முத்தரசி, 6 வருடம் உயிருக்கு உயிராக காதலிச்சா. அவளுக்காகவே வட இந்தியா வரைக்கும் வேலைக்குப் போனேன். வருவதற்குள் அம்மாவுக்கு பயந்து வேற கல்யாணம் பண்ணிகிட்டா. ஒழுங்கு மயிரா என்னைக் கல்யாணம் பண்ணிருந்தா சுகமா வாழ்ந்துருக்கலாம்ல.

சுகம்தான், 28 வயது வரை பிரம்மச்சாரியா சுத்துறதும் சுகம் தான்; காலையில லேட்டா எழுந்திரிக்கலாம்; கக்கூஸ்ல ஒரு புக்கும், சிகரெட்டும்னு ஒரு 15, 20 நிமிஷத்தைக் கழிக்கலாம். பல் விளக்கும் போதெ ஷேவிங் பண்ணிட்டு, ஒழுங்கா எடுத்தோமான்னு கவலையே இல்லாம, நாக்க வழிச்சுட்டு, அயர்ன் பண்ணியும் பண்ணாததுமான ஒரு சட்டையை எடுத்து மாட்டிகிட்டு கார எடுத்துட்டு ஆஃபிஸ் போகலாம்,

காலைல எழுந்ததும் காய்கறி வாங்கு, குழந்தைய குளிப்பாட்டு, ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுன்னு அந்த தொல்லையெல்லாம் இல்ல.

அட, அந்த பேப்பர் காரனுக்கு இந்த மாசம் காசு கொடுத்தோமா இல்லையா,.. சரி விடுங்க‌ சாய்ந்தரம் கொடுத்துக்கலாம்,

இன்னைக்கு பேப்பர்ல பாக்கும் போது செம காமெடி.. கொய்யால, சிரிப்புதான் வந்தது, சிஎம் அவன் ஊர்ல போலிஸ் சரி இல்லன்ன்னு உண்ணாவிரதம் இருக்கானாம், வடிவேலு சொல்ற மாதிரி சின்ன புள்ளதனமால்ல இருக்கு; ஒரு வேளை மங்குனி அமைச்சர்ன்னா இவந்தானோ;

மங்குனி அமைச்சன்னதும் நியாபகம் வருது; கககபோ மாதிரி படம் ஃபுல்லா டையலாக் லாம் செம ஹிட் இல்ல?? நல்ல வார்த்தையாத் தேடி தேடி போட்டாங்க சிம்புத்தேவன். ஆனாலும் வார்த்தைன்னா ஜெயமோகன் தான்; சும்மா பயமுறுத்துறார் மனுஷன்; இங்க்லீஸ் கு டிக்ஷனரி தேடலாம்; டமிழுக்கே தேட வச்சுட்டார்ன்னா பாத்துக்கோங்களேன்.

டமிழு டமிழுன்னு டிவி ல சொல்றதுதான் ஃபேஷன்ன்னு எல்லாரும் ஓட்டுனாலும் அத விடமாட்டேன்றாளுங்க. நம்மாளுங்க சாதிச்சுடானுங்க. ஒரு மணிப்பூர்ர் புள்ளய தமிழ் ல பேச வெகச்சுடானுங்களே ஆதித்யால.

ஒரே நேரத்துல எப்டிதான் விளம்பரம் போடுறானுங்களோ ஆதித்யாலயும், சிரிப்பொலிலயும், இதுல விளம்பரம்ன்னு அதுல மாத்துனா அதுலயும் விளம்பரம்;

நமக்கு ஏன் இந்த விளம்பரம்??? சரி சொல்லுங்க‌ .. எந்த காண்டம் வாங்கலாம் ?????