கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Tuesday, February 26, 2013

கோயில்; கொய்யா; அடப் போங்கய்யா..


ஞாயிறு கிழமைகளை வீணாக்க வேண்டாம்; கூடிய சீக்கிரம் கால் கட்டு உறுதி என தெரிந்த பிறகு இரண்டு வாரம், எதோ சொன்னார்கள் நேர்மறை அதிர்வுகள் அது இதுவென்று எனக் கேட்டு, இரு பழம் பெரும் கோயில்களை தேர்வு செய்தேன் சுற்றிப் பார்க்க. . .

முதல் வாரம் திருவண்ணாமலை
இரண்டாவ்து வாரம் திருவானைக்காவல் கோயில்

முதல் வாரம்

தரையில் படுத்து வானத்தை பார்த்துக் கொண்டிருப்பவன் அருகில் நமிதா, விஸ்வரூபம் கொண்டு நேர் நடையில் மேலே பார்க்கும் போது படுத்துருப்பவனுக்கு நமீதா தலை (தெரிவது கஷ்டம்) வானத்தை முட்டுவது போல் தெரியும்.

அதே ஃபீல் முன் வாசல் கோபுரம் பார்க்கும் போது, (எத்தந்தண்டி !!! )

நல்ல பையனாய் கால் கழுவிட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் முன் பக்கமும் அலை பாய்ந்த வேட்டியை எப்ப்டியோ கன்ட்ரோல் ல வைத்துக் கொண்டு முன்னாடி நடந்து போனேன் நண்பனுடன்.

நடிகை ஷர்மிலி போல் மிகப் பெரிய வளாகம்;  அங்கங்கே கூட்டம்;  நிதானமே பிரதானம் என்று முட்டாமல் முந்தாமல் பொது வரிசையில் போனோம்.

எங்களுக்கு முன்னால் ஆந்திர மாநில அரசு பள்ளி மாணவர்கள்; வரிசையில் வரும் போதே மச்சான் உன் ஃபிகர் பின்னாடி வருதுடா, அய்யோ பாத்து சிரிக்கிறாடா என்ற வசனங்கள்.
நமக்குத்தான் அந்த வரிகள் மட்டும் எந்த பாஷையானாலும் புரியுமே.

ஆனாலும் நடை உடை பாவனை பாஷைகளிலேயே தெரிந்து விடுகிறது, எந்த மாநிலமானாலும் அரசு பள்ளி அடையாளம்.

எல்லாம் முடிந்து இறுதியில் வரும் போதுதான் பார்த்தேன் இருட்டான கருவறை முன்பு மூன்று வரிசைகள்.

சாமி ஆசிர்வாதம் பண்ணலாம் என நினைத்து கை தூக்கும் போது தெரியாமல் பட்டே ஆசிர்வாதம் கிட்டும் படி இருக்க 50 ரூபாய் வரிசை,

கொஞ்சம் எட்டித் தூக்கி ஆசிர்வாதம் செய்ய 20 ரூபாய் வரிசை,

அனுஷ்காவைக் கண்ட அடிமட்ட ரசிகர்கள் ஆரவாரத்தோடு தூரமாய் இருக்க அங்கிருந்து அம்மணி கை காட்டுவதாய், இங்கே சாமியோட‌ ஆசிரவாதம் இலவச தரிசனம் செய்பவர்களுக்கு,

ஆக, எழைகளுக்கு சாமியோட ஆசிரவாதம் கொடுக்கனும்னாலே வட்டிக்கு பணம் வாங்கிட்டு வரணும் போல.

சந்தோஷமான விஷயம் ஜாதி இல்லை அங்கே, ஆனால் இப்போது பணம் எனும் வியாதி.

இன்னும் கொடுமை , திருச்சி அருகே திருவானைக்காவல் கோயிலில்.  . . வரும்