கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Thursday, August 25, 2011

அவனுக்கு கல்யாணம்; எனக்கு கார் கொடுத்தாங்க

அவனுக்கு திருமணம் என்ற பேச்சையே ஏன் எவரும் எடுப்பதில்லை; மிக பெரிய குழப்பத்தில் இருந்தான். செத்த பாம்புக்கு எதுக்குடா சிவப்பு சட்டைன்னு யாரும் கேட்டுட்டா ?? அப்புறம் இவன் அவனாகிட வேண்டுமே.

பீர் வளர்ந்து வோட்கா ஆகி இப்பொது விஸ்கி, பிராந்தியில் என்ன பிராண்ட் என இவன் நண்பர்களுக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு கவலை அதிகமாகிக் கொண்டே போகிறது இவனுக்கு;

இறுதியாக ஒரு நாளில் கானல் நீரை கையால் அள்ளியே விட்டான். திருமண பேச்சு நடந்தது; கொடுமையான பசில இருப்பவனுக்கு கம்பன்கூலு KFC சிக்கன் ஆவது போல மிகவும் குஷியோடு தயார் ஆகி விட்டான்.

நெட்டையோ குட்டையோ குருடோ செவுடோ கிடைத்தது போதும் என அவன் பேச வில்லை; பெண்ணும் குறை சொல்லும் அளவில் இல்லை; அவனுக்கு மிகவும் சந்தோசம்;

நாளும் வந்தது; பெண்ணும் கூரைப்புடவையில் குனிந்த தலையோடு வந்தாள் மண மேடைக்கு; அவன் அவளைப் பார்த்தான்; அவள் அருகில் பார்த்தான்; அவளது அம்மா; கொள்ளை அழகு;

அவனுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போலானது;

அது மாதிரிதாங்க ஆச்சு எனக்கு; என் அலுவலகத்தில் கார் கொடுத்தாங்க; கார் கொடுத்து அதை ஹைதராபாத் ரோடு ல ஓட்ட சொல்றது மேல சொன்ன கதை மாதிரிதான்;


பி.கு :ஜீரோ டிகிரி, 180 டிகிரி ல எங்கேயும் ரோடு இல்லாத, கொடுமையான ட்ராபிக் உள்ள ஊரு ஹைதராபாத் மட்டும்தான்