கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, March 25, 2011

இத மட்டும்டா; என் ராசால்ல....

இளைஞன் ஒருவனின் கல்விப் பயணத்தைக் கேட்பவருக்குத் தெரியும்,  அவன் உறுதி செய்யப் பட்ட பயணச் சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யாத பெட்டியில் மிகுந்த சோகத்துடன் பயணத்தை சொல்வான் என்று.

பத்தாவது படிக்கும் போது அம்மா தரும் ஆறுதலான சொற்றொடர், " டேய், இந்த வருசத்தை எப்படியாவது கஷ்டப் பட்டு படிச்சுடுடா, நல்ல ஸ்கூல் ல இடம் கிடைச்சுதுன்னா எந்த பிரச்சினையும் இல்ல" .என்னவோ பக்கத்து வீட்டு பொண்ணு வந்து இவன் சைக்கிள் சூப்பர் டா சொல்லிட்ட மாதிரி சந்தோசம் வந்துடும் இவனுக்கு. அப்பாடா இந்த வருசத்தை மட்டும் படித்து தொலைத்தால் போதும் என பொண்ணுங்க ஸ்ட்ரச்ஷர் ல ஜியாக்ரபி படிக்க வேண்டியவற்றையெல்லாம் முக்கி முனவி இமயமலை, தக்காண பீடபூமி தட்டு தடவி முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏற எழுதப்படாத ஒப்பந்தத்தில் ஒரு கையொப்பம் போட்டு வைப்பான். அடிமை சிக்கினான்.


பத்து பசங்க கூட கிரிக்கெட், தெரு முக்கத்துல அட்டேண்டன்சு, வயசுக்கு வந்த புதுசுல கடலைக்கான ஏக்கம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து இவனும், " தி டப்போடில்ஸ்" என பொட்டை மனனம் செய்து நல்ல மதிப்பெண்ணும் வாங்கி விடுகிறான். இனி ஜாலிதான் என கனவு கண்டு விழிக்கும் முன்பாக அடுத்த போராட்டம். 

அவன் கனவில் விழுந்த வெடிகுண்டு என அவன் அப்பா சொல்வார், "பன்னிரண்டாவது உன் வாழ்க்கையிலேயே டர்னிங் பாயிண்ட், இத ஒழுங்கா முடிச்சா நல்ல காலேஜ், நல்ல கோர்ஸ்;" பீர்ல பிசிக்ஸ், அவகிட்ட கெமிஸ்ட்ரி, அவ அம்மாகிட்ட எப்படி அவங்க பொண்ண பண்றதுன்னு கணக்கு, இன்னும் கொஞ்சம் மேல பயாலாஜி என கனவுப் பாடங்கள் அனைத்தும் காத்துல போற மாதிரி நாலு சாத்து சாத்துவார் நாலு மார்க் குறைந்த உடன்.

பத்து நாலு தொடர்ந்து, அத பண்ண மாட்டேன் ஆண்டவா, இந்த கல்ல தூக்கிப் போடுவேன் அது அந்த பாலத்தை தாண்டி விழுந்ததுன்னா நான் நல்ல மார்க் வாங்குவேன் என தன பயம் கலந்த பத்தாம் பசலித்தனத்தை வெளிப்படுத்தி எப்படியோ ஆஞ்சநேயர் அருளால பக்கத்துல உள்ளவனைக் காப்பியடிச்சு நல்ல மார்க் வாங்கியாச்சுன்னு பெருமூச்சு ஒன்றை விடுவான்.

மூச்சு காற்று, வளி மண்டலத்தில் கலக்கும் முன்னர், கவுன்செலிங், காலேஜ், செமஸ்டர், பிரக்டிகல், அர்ரியர்ஸ் எல்லாம் வந்து உலுக்கி எடுக்கும் அவன் வாழக்கையை.

இதெல்லாம் இப்போ ஏன் சொல்கிறேன்?

நமது இந்தியாவின் உலகக் கோப்பை பயணமும் இதை ஒத்தே இருப்பதுதான் வேடிக்கை. திக்கித் திணறி டார்ச் லைட்லாம் அடித்து வழி தேடி கால் இறுதி வந்தால் ஆஸி, அரை இறுதி பாக் என அனைத்தும் இந்த மேட்ச் மட்டும் ஒழுங்கா ஆடிடுங்கடா ராசா என டோனி கெஞ்சுவது காதில் கேட்கிறது.

(ஆனா அவர் மட்டும் ஒழுங்கா ஆட மாட்டார் என்பது அப்பா சர்டிபிகேட் ஐ பரணில் தேடி நியாயம் கோரும் சிறுவன் கதை ஆகும்)  

Wednesday, March 16, 2011

அவளுக்கு அம்மை

தேன் நிறை 
வண்ண ரோசாவில்தானே
கருவண்டுகள் மொய்க்கும்!
மெய் மறந்து ரசிப்பேன்!!
அது இருக்க - உன்  
அழகு நிறை
மஞ்சள் வதனத்தில் 
அம்மைத் தழும்புகள் 
எம்மாத்திரம்!!! 
கண்ணே, 
நாட்கள் போதாதடி 
உன்னை நான் ரசிக்க........... 

Sunday, March 13, 2011

முத்தம், சத்தம், பதற்றம்


வர வர ஏன்தான் இந்த விமலுக்கு இப்படி புத்தி போகுதுன்னே தெரியல. கல்லூரி முடித்தும் இன்னமும் வேலைக்கு போகாமல் பிஸியாக சுற்றிக் கொண்டிருபதுதான் இவனுக்கு வேலை. அவன் அப்பா ரிடைர்ட் என்னவோ. 

இவன் இருக்கும் அப்பர்த்மென்ட் அந்த காலத்து அப்பர்த்மென்ட் என்றே சொல்ல வேண்டும். அதில் 1961 என பொறிக்கபட்டுள்ளதே. விமல் பெற்றோருடன் எப்போ வந்தான், எப்படி வந்தான், என்றெல்லாம் தெரியாது. கேட்டாலும் சொல்ல மாட்டான். திமிர் கொஞ்சம் அதிகம்தான். பார்ப்பதுக்கு வேறு, பார்கிற மாதிரி இருப்பதாக தங்கைகளின் கல்லூரி நண்பிகளிடமிருந்து இவருக்கு செர்டிபிகஷன் வேற. அதைக் கேட்டதிலிருந்தே கொஞ்ச நாளாக யார் இவனிடம் வந்து கேட்டாலும், சிகரெட் பிடிக்கிரதுனால கால் இரண்டு விரகளுக்கிடையே கருப்பு, செருப்பு கடித்ததால் கை விரல்களில் காயம் எனச் சொல்கிறான். தலை கால் புரியாமல் திரிகிறானாம்.

பெண்களைக் கிண்டல் செய்வதே பிழைப்பாக கொண்டு திரியும் ஒரு இளைஞன். வேற வழி இல்லை; யார் பொறுக்கின்னு சொன்னாலும் அடிப்பான்.
இவன் வீட்டுக்கு நேர் எதிர் அப்பர்த்மென்ட் ல் இருக்கும் காவ்யாவை தொந்தரவு செய்வதே இவனுக்கு இப்போதைய வேலை.

அவள், அவள்அம்மாவுடன் வரும் போது கை ஆட்டுவது. தனியாக மாட்டினால் பேச சொல்வது, அவளைக் காதலிப்பதாக சொல்வது, அவளை நிற்கும் போது போடோ எடுப்பது என தொந்தரவு கொஞ்சம் நிறையவே ஆகி விட்டது. இதைக் கேட்டு அவள் அழுவதும் வழக்கமாகி விடும். அழுது கொண்டே இருக்கும் போது இவன் எதையாவது சிரித்து சொல்லி அவள் மறந்து விடுவதும் நடக்கிறது. அதனால் இது வரை அது பெரிய பிரச்சினையாகாமல் இருந்து வருகிறது.

இன்று அது பெரிய அளவில் முத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். உச்சகட்ட தொந்தரவாக, அவளை நிற்க வைத்து ஒரு முத்தம் கொடுத்தால்தான் விடுவேன் என்றான். அவளோ அழ ஆரம்பிக்க, இவன் செய்வதறியாது நிற்க, அவள் ஓடியே விட்டாள்.

அவனுக்கு உச்சகட்ட கோபம். ஒரு கொடூரமான திட்டம் தீட்டினான். நாளை காலை அவள் கதவைத் திறக்கும் போது கட்டிபிடித்து முத்தம் கொடுத்திட வேண்டுமென.

அடுத்த நாள் காலை, இவன் வாசலில் காத்திருக்கிறான். எதிர் வீட்டு கதவு திறக்க வில்லை. அரை மணி நேரம் ஆனது. ஒரு மணி நேரம் ஆனது. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை. இவனது அம்மா வேறு, "டே..இட்லியத் தின்னுட்டு போய் சுத்து. சுத்துற இடத்துல எங்கேயாவது மயங்கி கிடக்க போற" என கிண்டல் தொனியுடன். 

திடீரென எதிர் வீட்டு கதவு திறக்க காவ்யா வெளியே வருகிறாள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே.

தடீரென இவனைப் பார்த்தவள் "அம்மா" என ஒரே கூச்சல். இவன் வீட்டில் இருந்த செருப்பு ஸ்டான்ட்ல் இருந்து ஒரு செருப்பு கீழேயே விழுந்து விட்டது. அந்த அளவுக்கு சத்தம். எல்லாரும் வெளியில் வந்து விட்டார்கள். 

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன கேள்வி கேட்டாலும் திரு திருவென முழிக்கும் மன்மோகன் சிங்க் மாதிரி முழிக்கிறான்.

அவள் வாயைப் பொத்துகிறான் அடாவடியாக. அவளுக்கு கண்ணீர் பீரிட்டு வருகிறது. அவள் அம்மா வெளியில் வரும்போதே "என்ன, என்ன!!" என்று சத்தம் போட்டுக் கொண்டே வருகிறாள்.

காவ்யா அழுதுகொண்டே அம்மாவிடம் " அம்மா, இந்த விமல் நாய் எப்ப பார்த்தாலும் என்ன தொந்தரவு செய்யுது. முத்தம் கேட்டு டார்ச்சுர் மா " என்றால். அவள் அம்மாவுக்கு பயங்கர கோபம்.


" பெரிவங்கள நாய்ன்னு சொல்லக் கூடாதுன்னு உனக்கு எத்தன தடவடீ சொல்றது? " என்றாள் காவ்யாவிடம். 

"நீ போம்மா " என்ற படியே அவள் ஓடி ஏறினாள் ஆட்டோவில் பத்து குழந்தைகளோடு பதினொன்றாய் பள்ளிக்கு போக.  

Friday, March 11, 2011

நட்பு


"மச்சான் அவளை பாருடா செம கட்டைடா, அவ ஆளும் சைசும், அப்பப்பா சும்மா கும்முன்னு இருக்காடா, நாம ரெண்டு பெரும் அவல கூட்டிட்டு ஒரு நாள் சினிமாவுக்கு போறோம், நடுவுல உட்க்கார வச்சி நீ இந்த பக்கம் நான் அந்த பக்கம்.. செம குஜால்டா என்ன சொல்ற, " சொன்னவன் விமல், 

பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு. படிப்பு நல்லாத்தான் வரும், ஆனா இப்போதைக்கு அது வர வேண்டாம்ன்னு இந்த தறுதலைதான் தடுத்து வைத்து இருக்கிறது.

கேட்டவன் கமல். அவனோட உயிர் நண்பன். அறை சிநேகிதம். கொஞ்சமும் மன வேற்றுமை இல்லாத நட்பு. ஒரே மாதிரி எண்ணங்கள், இருவருமே புத்தகப் பிரியர்கள், பஸ் பயணம், வாரம் இருமுறை ஹோட்டல், எந்த படம் வந்தாலும் தேவி தியேட்டர் தான் இவர்களுக்கு மாலை நேர வகுப்பறை. வாரம் ஒரு முறை கன்னிமாரா நூலகம். (மேலவன் பார்க்க, கீழவன் படிக்க), மதிய வெயில் அடித்தால் லேண்ட்மார்க் தஞ்சம்.மற்ற படி புண் பட்ட நெஞ்சமும் இல்லை, மாது தோல்வியும் இல்லை. அதாங்க புகையும் இல்லை. மதுவும் இல்லை. மாதுவும் பேச்சளவில். 

கல்லூரியில் எத்தனை பெரிய பேராசியர்கள் பாடம் எடுத்தாலும் விடை தெரியாத கேள்வி இவர்கள் நல்ல பசங்களா கெட்ட பசங்களா?. 

இவர்களுக்கு என்று சிறு கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாத கூட்டம். பெண்களையும் நெருங்கி தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இருவர் மீதிலும் பெண்கள் மத்தியிலிருந்து இருக்கும் ஒரு கம்ப்ளைன்ட், பெண்களை கண்டால் முறைக்கிறார்கள் என; ஆனால் இந்த நாயகர்களைக் கேட்டால் ரொமாண்டிக் லுக் விட்டேன் என்பார்கள்.

சரி இப்போது அவன் சொன்ன வேத வாக்குக்கு வருவோம். "என்னடா சொல்ற" என்று மீண்டும் வினவினான் கையைப் பிசைந்துகொண்டே. 

கமல் கையில் இருந்த எதோ சாமிக்கு நேந்து உட்டு கட்டப்பட்ட கயிறை வாயில் வைத்துக் கொண்டே" டேய் விடுடா அப்டில்லாம் சொல்லாதடா. பாவம் டா " என்றான். அதற்கு விமல் பதிலாக சொன்னது ஒரு கெட்ட வார்த்தை.

வழக்கம் போல இருவரும் எங்கேயோ வெளியில் மேய்ந்துவிட்டு உறங்கி விட்டார்கள்.

மறுநாள் ராகிங் தினம். இவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் வழக்கம் போல எவள் எவளையோ முறைத்தபடி நடந்து கொண்டிருந்தார்கள். "டேய் மாப்ள இரு நான் போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன்" என்று வேகமாக கமல் கான்டீன் உள்ளே சென்றான். "எந்த ஜூனியர் பார்த்துட்டு வெறிக்க ஓடுதோ தெரில நாய்" என்று அவன் காது பட உரக்க சொல்லிட்டு விமல் அந்த கம்பியில் உட்கார்ந்தான்.

அப்போது முதல் வரிப் பெண், (அதாங்க குஜால்) ராக்கிங் முடிந்து அந்த பக்கமாக கலங்கிய கண்களோடு வந்து கொண்டிருந்தாள்;

அட எங்க இங்க உட்க்கார்ந்துகிட்டு இருந்த நம்ம விமலைக் காணோம்?

16 மாசத்துக்கு அப்புறம்,

விமல், " டே, அவ ரொம்ப நல்ல பொண்ணுடா. என்னை ரொம்ப நம்புறாடா. உன்கிட்ட கூட சொல்லல, அவளை காதலிக்கிறேன் டா.
......

... டேய் .. அப்புறம்.. அன்னைக்கு சொன்னெதெல்லாம் நினைச்சா வெட்கமா இருக்கு டா"

கமல்  " டேய்.. என்னடா சொல்ற நீயா?

விமல் " ஆமாம்டா. வீட்ல சொல்லிட்டேன். அதெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ நான் அவளைக் கூட்டிட்டு சினிமாக்கு போலாம்னு இருக்கேன். நீநீநீநீ.." என்று இழுத்தான் ஒரு அசட்டு சிரிப்புடன்.

அதற்கு கமல் சிரித்துக்கொண்டே " டேய் அப்ப சொன்னதெல்லாம், எக்ஸாம் மாதிரிடா, அப்பப்ப கிளியர் பண்ணிட்டே வரணும்; அதெல்லாம் மனசுல வசுகிட்டா டிகிரிய  முடிக்க கஷ்டப் படுறது மாதிரி, வாழ்கையே பாரமா தெரியும். நீ ஏதும் கில்டி ஆ எடுத்துக்காம ஜாலிஆ போயிட்டு வா. நான் அதெல்லாம் மனசுல வச்சுக்கல" என்றான்.

சரி டா மச்சி .. நீயும் வாடா என்றான் விமல் மனசு லேசாக.  

Wednesday, March 2, 2011

ஏமாற்றம் # செய்வினை, செயப்பாட்டு வினை


9 வது 10 வது படிக்கும் போதே கூடை கூடையாக மீன் கிடைத்தது; சிறு வயதிலேயே தின்றால் மூளை மங்கி விடும் என எண்ணி அதை தின்ன வில்லை. 

முருகன் பிறந்த  மாதம் பள பளவென மின்னியது. நெய் சோறே கண்ணில் பட்டது. பருமன் ஏறினால் தாங்காது என விலகி விட்டேன்.
  
இரண்டு வருடங்கள் கழிந்ததும், காற்று அடிக்க ஆரம்பித்தது. இதமான காற்று வாங்கலாம் என எண்ணி வெளியில் சென்றேன். அவ்விடம் அடியேனின் முட்டாள் தனம், சட்டை அவிழ்த்து அனுபவிக்காமல் முழுதும் உடுத்தி அனுபவித்ததால் வெக்கைதான் மிஞ்சியது.

வெளியில் வந்தேன், இசையும் கவிதையும்  எனைப் பிசைந்தது; மிரட்டியது; குழந்தையின் அழுகையும், சிரிப்பும் கலந்து கேட்டது. மீண்டு எழுந்தேன்; மீண்டும் எழுந்தேன் 

இறுதி வரை இந்த முட்டாள், மந்திரம் ஓதினால் நினைத்தது கிட்டும் என தினம் தினம் மந்திரம் ஓதத் துவங்கினேன்; அனுபவித்தே ஓதினேன். அதில் மெய் மறந்தேன். இறுதியில் தெரிய வந்தது,

"கடவுள் இல்லை". 

செய்த தவறுகள் என்ன? முட்டாள் என்பது முறையா?
இல்லை

மீனே போதும் எனத் தின்றிருந்தால் தூண்டில் கிடைத்திருக்காது; நீந்தவும் தெரிந்திருக்காது;

இப்போது வித்தகன் இல்லைஎனினும் வாழத் தெரிந்தவன்; வாழவும் தெரிந்தவன்;

மீன் - இன்னொருத்தன் தின்றான்; தின்பான்  
காற்று - இன்னொருத்தனையும் தீண்டியது; தீண்டும்
மாதம் - மற்றோருவனுக்கும் 
கவிதை - படிப்பவன் வருவான் 
மந்திரம் - அவாளுக்கு மட்டும்            

இவன் படிக்க,  புத்தகம் கிடைக்கும்

இனியும் நான் எத்தனிப்பதில்லை; ஆனால் செத்தவனையும் சீண்டிப் பார்க்கும் உலகம் இது. 


இறுதியில் இவன் ஏமாற்றவும்  இல்லை; ஏமாற்றப் படவும் இல்லை