கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, February 23, 2011

காதல்


வெற்றிடம் மீது 
கொண்ட பற்று - 
புகுந்தது காற்று; 

மேல் பாதி கீழ் பாதி 
வாங்குது மூச்சு-

நொடிகளே கடந்தது;
உயிர் பிரிந்தது;

எங்கே இனி "வெற்றிடம்"  ??

Monday, February 21, 2011

பிரார்த்தனை

கல்லூரி முடிந்து காலம் கடந்து செல்கிறது, சாலைகளில் சேலைகளை கண்ட மனதின் வேகத்தையும் தாண்டி. கால வரையறை என்பது அனைத்திற்கும் உண்டு. இதெல்லாம் ஏன்?

நேற்று இரவு நாக்பூர் நகரின் துரித உணவகம் ஒன்றில் கோழிக் குஞ்சோடு இணைந்து வறுபட்ட சாதம் சொல்லி காத்திருந்தேன். நான்கு கல்லூரி மாணவர்கள் வழக்கம் போல மாணவிகளை அசை போட்டுக் கொண்டே உள்ளே வந்தனர். மிகவும் சத்தமாக இருக்கும் அறிவியல், கணித வார்த்தைகளை கெட்ட (பெண்கள்) வார்த்தைகளோடு இணைத்து மிகவும் சுவாரஸ்யமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்குள் உதித்தது, இந்த ரசிப்பு ஏக்கமாக மாறும் பொழுது நான் துரித உணவகம் வருவதை நிறுத்தி இருக்க வேண்டும். 
இல்லாத கடவுளிடம், இருக்கும் சக்தியிடம் பிரார்த்தனை.