கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, January 24, 2011

கடிதம் - 1

அன்புடைய ராஜனுக்கு,

உங்களைப் போன்ற பெரியாரை ஒருமையில் விழிக்கும் அளவு நான் உரிமையுள்ளவலாக இல்லை எனும் ஏக்கம் என்னை ஒருமையில் துவங்க வைத்தது. அவ மரியாதைக்கு மன்னிப்பும் அன்பும் வேண்டுகிறேன். 
இந்த சமகால 20 ம் நூற்றாண்டு எழுத்தாளர் உலகில்  கல்கி, சுந்தர ராமசாமி போன்றோரும், சாண்டில்யன், சுஜாதா போன்ற கம கம எழுத்தாளர்களும், ஜெய காந்தன், அகிலன் போன்ற குணசித்திர எழுத்தாளரும் , ஜெய மோகன் போன்ற கடின தமிழ் எழுத்தாளர்களும், யுவன் சந்திர சேகர் போன்ற கற்பனாவாதிகளும் மணந கவர்ந்த நிலையில், இவர்கள் வரிசையில் தற்போது தங்களை அனைத்திலும் கலவையாக பார்க்கிறேன். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னராக தங்களுக்கு கிடைக்க வேண்டிய நோபல் விருது இன்னும் கிடைக்காதது அவர்களின் நுண்ணரசியல் என எனக்கு புரிய வைக்கிறது. எழுத்துலகில் ஷேக்ஸ்பியரின் புலமையும், கம்பனின் சொல் வளமும், பூவுலகில் யாமறியா கற்பனா வளமும் கொண்ட உமக்கு நோபலுக்கான பரிந்துரை என சொல்லி உங்களை அசிங்கப் படுத்த மாட்டேன். இனி அதன் பெயர் மாற்றப் பட்டு ராஜன் விருது என எழுத்துலக குழந்தைகளுக்கு வழங்கப் படும். குழந்தைகள் பெயர் சொல்லப் பட வேண்டாம் என விரும்புகிறேன். 
உங்களின் டச்சு புலமையும், டாஸ்மானியா கவிதையும் இங்கு எவருக்கும் வராது. உங்களின் உலக அறிவு எனை மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஜன்னலோர சின்ன பூக்களாய் பெண்களால் விரும்பப் படும் உங்களை கண்டதும் காதல் கொள்வர் அனைவரும் கண்ணன் மேல் காதல் கொண்ட கோபியராய். (கணவர்மார்கள் தவறாக எண்ண மாட்டார்கள்). உங்களின் விசிறிகளை வரிசைபடுத்தினால் அது ஆன்றோமடாவில் நின்று பார்த்தாலும் தெரியும் நீண்ட சுவராய் இருக்கும். உங்களை டாஸ்மானியாவிற்கும், குக் தீவுகளுக்கும் ஸ்பொன்சர் செய்வதில் பேரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவள்

உங்கள் எழுத்தில்  மயங்கிய 

கிருபாளினி
நோ.10 . கட்டபொம்மன் தெரு 
சாலமன் தீவுகள்
மெலனேசிய
oceania  
24 .01 .2011
 நேரம் 14 .23  

Sunday, January 9, 2011

பலூன்

மனிதனின் வாழ்நாளை எண்ணிக்கையாய் காண, கணிசமான அளவு உயர்த்திட சொன்னதைக் கேட்கும் கிளிப் பிள்ளையாய் மருத்துவரை பணக்காரர்கள் ஆக்குபவர்கள் அதிகம்.


வாழ்நாளை எண்ணிக்கையில் உயர்த்துவது எனும் அனைவரின் ஆர்வமான முயற்சி என்பது, காலையில் இரண்டு இட்லி, மதியம் கொஞ்சம் தயிருடன் உணவு, மாலை நேர கொட்டை வடிநீர், இரவு உணவாக இடியாப்பம், பால், படுக்கை என இறுதி நாட்களைக் கடத்துவதில் ஆர்வத்தின் உந்துதல். அவர்களை பொறுத்த மட்டில் வாழ்க்கை என்பது எத்தனை நாட்கள் எனும் எண்ணிக்கையே.

மனித உடலை பையாக கண்டனர் பெரியர். நான் இலக்கிய உலகின் சின்னஞ்சிறு குழந்தை ஆகையால் அதை விளையாட்டு பருவம் இழந்த ஒரு சிறுவனின் கையில் இருக்கும் காற்றுக்கு ஏங்கும் ஒரு பலூன் ஆக காண்கிறேன்.

அதற்கு உணவாக, காற்றாக இடுவது நேரங்களை; அதாவது எந்த விசயங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடாமல், எந்த விசயங்களையும் கற்க விரும்பாமல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளி போடும் ஒவ்வொரு நிமிடங்களும் அதற்கு உணவு. இந்த விசயங்களிலும் விருந்தோம்பிகளாய் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்களே ஏன் என்பது என் வினவு.

இதற்காக நான் சிறுவர்கள் விளையாடும் நேரம், இளைஞர்கள் அரட்டை நேரம், குட்டி சுவர் நேரம், பெண்களுடன் அளவளாவல் நேரம், குடும்ப பெண்களின் மதிய நேர அரட்டை, அலுவலகத்தில் சேட்டை, தேனீர் நேரம், மின்னல் வேக உலகத்திலும், ஜன்னலோரம் இருந்து மழை, வெயில்,குளிரை ரசிக்கும் நேரங்களை அதில் சொல்லவில்லை; காதல், காமம், ஊடல், தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை, அதற்கான நேரங்களை குறிக்கவும் இல்லை; முக்கியமாக தூங்கும் நேரம் இதில் வரவே இயலாது.

இந்த எந்த விசயங்களும் இல்லாமல் விரயமாக வெறுமனே தள்ளிப் போடும் நேரங்கள், பொய்யாய் நடிக்கும் நேரங்கள், சோம்பேறியாய் இருக்கும் நேரங்கள் அனைத்தும் காற்றாகி உடல் எனும் பலூனை உப்ப வைக்கிறது. ஒரு எல்லையை தாண்டும் போது பலூன் வெடித்து நமது உயிர் வெளியேறுகிறது.

சரி, ஏன் இந்த உதாரணம்? பலூன் ஏன் உடலாக இருக்க வேண்டும்? 

உணவாக நான் சொன்ன விஷயங்கள் வாழ்வில் அதிகமாகும் போது வாழ்நாட்கள் அதிகமாக தெரிந்தாலும் இறுதி நாட்களில் நாட்களே தெரியுமே ஒழிய எண்ணங்கள் தெரியாது. அந்த நேரங்கள் மிகக் குறைவாக உள்ளவனது வாழ்க்கை பின்னாளில் முழுவதும் அனுபவங்கள், கற்பனை எண்ணங்கள் நிறைந்து வண்ண மயமாய் மின்னும் .

பலூன் உப்பி வெடித்தலும், பலூன் ஊதப்படாமலே இருத்தலும் எண்ணிக்கையை பொறுத்தவரை ஒன்றாகவோ வேறுபட்டோ எதிர்பட்டோ இருக்கலாம். ஆனால் அந்த உணவு இடாத வரை எண்ணங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்

இந்த பலூனையே  தேடுபவர்கள் இந்த பூவுலகில் பலர்; அவர்கள் தேடிமுடித்து உணரும் போது பூவுலகு துறக்கும் நேரம் வந்து விடும்;

நான் ஏதோ உறுதி செய்தது போல் தெரிகிறது; பார்க்கலாம் என் பலூன் எந்த நிலையில் உள்ளது என்று!!!!